அந்நியர் வந்து பாத்திடும்போது அதிசயம் தானே பூத்ததடா!
கவி சொன்னவர் பலர் பார்த்திடும் போது ஆகாயம் தானே பார்த்ததடா
புலி ஆகாயம் தானே பாய்ந்ததடா
வென்றிடும் களம் நாடிச்சென்றதில்லை அங்கே
குன்றிடும் மனம் என்றும் இருந்ததில்லை
சென்றிடும் வீரர் கொன்றிடும் வரையிலும் ஓய்ந்ததில்லை
களம் என்றிடும் வீட்டினில் கண் தூங்கவில்லை
வெடித்திடும் குண்டும் பயம் கொடுக்கவில்லை
பாயும் துப்பாக்கிச்சன்னமும் கூட துளைக்கவில்லை
சாயும் வேங்கைகள் என்றுமே நமைவிட்டுப் போகவில்லை
பாயும் கரும்புலிகூட சிரிக்கத் தவறவில்லை
சென்றிடும் போதும் சிரித்திடும் முகம்
பகை கொன்றிடும் போது கலங்குது மனம்
என்றிவர் மனமாறுமோ, களம் தீருமோ
கண் கொண்டவர் மீதினில் சதிராடுமோ?
காற்றுக்கூட முகவரி மறந்தது
மழையும் கூட வீடுகள் தேடுது
மேகமும் கூட புலிக் காற்றுக்காய் ஏங்குது
நிலங்களும் கூட தோள்வெடிப்பேற்குது
துப்பாக்கிச் சன்னமும் சோம்பேறியாகுது
துர்ப்பாக்கிய நிலையான வவுனியா முகாமிலே
கிளியில் கிளிகளின் கதறல்கள் கேக்குது
மாங்குளத்திலே தமிழ் யாழிகளின் இரத்தமோ பாயுது
அழுதிடும் குழந்தையும் ஆதரவு தேடுது
அன்னையர் இன்றி அது தானே சாகுது
அணைத்திட இருக்கும் புலி பயங்கரவாதி பெயர் வாங்குது
ஆதரவு கொடுத்திட நாமோ தயக்கம் காட்டுது
நிலம் வாங்கவேணும்
புலத்தில் நகை வாங்கவேணும்
கழுத்தில் அதைப்போடவேணும்
ஈழத்தில் கழுத்தறுபடுகுது
பிசாஎண்டால் தான் கழுத்துக்க இறங்குமாம்
மக் டோனால்ஸ் எண்டாத்தான் சாப்பாடு செமிக்குமாம்
சிவாஸ் அடிச்சாத்தான் வெறியும் கூடுமாம்
சிவாவோ அங்கே கஞ்சியின்றி சாகிறான்
பொறுத்தது போதும், இழந்தவை போதும் என்றும் நிலைத்திட வேணும்
தமிழ் வாழ்ந்திடவேணும், கண் விழித்திடவேணும்
அட்டிலில் இருக்கும் விட்டில்கள் அல்ல எங்கள் உறவுகள்
ஆதரவின்றித் தவிக்கும் சிட்டுக்கள்
இரத்தம் ஆறாய் ஓடுது
இந்துமாகடல் கூட செந்நிறமாகுது
இன்னம் சிறிதுகாலம் தான் புலியை அழிக்க இல்லை
ஒட்டுமொத்த தமிழை அழிக்கவென்று கூவுது சிங்களம்
பாடிடும் வேங்கையும் பணியவேண்டுமாம்
கோடிட்டுக்காட்டுது இனவெறியரசு
புலம் தனில் களமாடிடும் வேங்கையும் பணிந்திடவேண்டுமாம்
அடக்க இது ஒன்றும் அரையடிப்பூனையல்ல
ஆறடிப் புலி என்று உரக்கவே சொல்லுவோம்…………
+copier.jpg)





இப்படைப்பு என்னுடையது அல்ல... இது யாருடைய படைப்பு என்றும் எனக்கு தெரியவில்லை. மெயிலில் எனக்கு வந்தது. தெரிந்திருந்தால் கண்டிப்பாக பெயரை குறிப்பிட்டு இருப்பேன்.
தலைவரின் புகழ் பாடும் கவிதை என்பதால் யாருடைய அனுமதியும் கேட்க வேண்டிய அவசியமில்லை. இதை எழுதியவரே நான் இங்கு குறிப்பிட்டமைக்கு மகிழ்ச்சி அடைவார்.
பெயரை குறிப்பிடவும் நான் சேர்த்து விடுகிறேன். குறிப்பிட்டமைக்கு நன்றி.