ஹிந்துமதம் என்பதும், ஹிந்துமத சம்பந்தமான சாஸ்திரங்கள், கடவுள்கள், கடவுள் கதைகள், நடத்தைகள் முதலியவைகள் எல்லாம் தமிழனுக்கோ, தமிழ்நாட்டிற்கோ சம்பந்தப்பட்டதல்ல; சிறிதளவும் சம்பந்தப்பட்டதல்ல. அவை யாவும் எந்தத் தமிழனாலும் ஏற்பட்டவையுமல்ல; அவற்றுள் எவையும் எதுவும் தமிழ்மொழியில் தமிழ்நாட்டில் செய்யப்பட்டவையுமல்ல.
இவையாவும் அந்நிய மொழியாகிய வட மொழியிலும், தமிழன் - தமிழ் நாட்டினன் அல்லாதவனான அந்நியன் மொழியாகிய ஆரிய மொழியிலும் வட நாட்டானான ஆரியனாலுமே ஏற்படுத்தப்பட்டவை, செய்யப்பட்டவையுமே ஆகும்.
ஆரியன் இங்கே வந்து “அய்யர்” ஆனான்
அது போலவேதான் ஜாதி என்பதும், ஜாதி முறை என்பதும், ஜாதி அமைப்பு என்பதும், தமிழ்நாட்டிற்கோ தமிழர் சமுதாயத்திற்கோ ஏற்றதுமல்ல; தமிழ் பழக்க வழக்கங்களுக்கு, தமிழர் வாழ்விற்கு ஏற்றவையுமல்ல; ஏனென்றால், இவை யாவும் யாவற்றுக்கும் ஏற்பட்ட நடப்பு எதுவும் தமிழ்மொழியில்லை என்பதோடு, தமிழர் சமுதாயத்தில் இருந்தவையுமல்ல; தமிழரால் உண்டாக்கப்பட்டவையுமல்ல.
ஜாதியானது, எப்படி வெள்ளைக்காரன் நம் நாட்டுக்கு வந்து “துரை”ஆனானோ - முஸ்லீம் எம்படி நம் நாட்டுக்கு வந்து, “சாயபு”ஆனானோ - அதுபோல் ஆரியன் நம் நாட்டுக்கு வந்து “அய்யர்” ஆனான்; “பிராமணன்” ஆனான்; “பிராமணாள்” ஆனான்.
பார்ப்பானைப்போல வேதத்தைத் தொட்டாலும் தீட்டு
பார்ப்பானுக்குக் குறிப்புப் பெயர் வேதியன் என்பதாகும். வேதியன் என்றால் வேதத்திற்கு உடையவன் என்பதுதான் பொரும். அந்த வேதம் எந்த விதத்திலும் தமிழர்களுக்குச் சம்பந்தப்பட்டதல்ல; தமிழர்களுக்கு உரியதுமல்ல; தமிழுமல்ல; தமிழரால் ஆக்கப்பட்டதுமல்ல. எப்படி ஆரியன் (பார்ப்பான்) கடவுள், தமிழன் தொட்டால் தீட்டு ஆகிவிடும் - கெட்டுப்போகும் என்று சொல்லப்படுகிறதோ, அதுபோலவே வேதமும் தமிழன் தொட்டாலும், அதைப் படித்தாலும், காதில் கேட்டாலும் கெட்டுவிடும். பார்ப்பான அல்லாதவன் பார்த்து கேட்டுவிட்டால், அவன் குருடனாக ஆக வேண்டும் - செவிடனாக ஆகவேண்டும் என்பது பார்ப்பனர் நிபந்தனை ஆகும்.
இதையேதான் சற்றேறக்குறைய பார்ப்பன ஆதாரங்களாகிய சாஸ்திர - தர்ம சாஸ்திர - புராணங்களுக்குமே பார்ப்பனர் நிபந்தனை விதித்து இருக்கிறார்கள். இவைகள்தான் இந்துமத தர்மம் ஆகவும் - இந்து மதக் கொள்கை ஆகவும் இன்றும் தமிழ்நாட்டில் நடப்பில் இருந்துவருவதுமாகும்; இவைதான் இந்துமதத் தர்மமும் ஆகும்.
நமது மதமாயிருந்தால் நாம் ஏன் ஈனஜாதி இவற்றிற்குக் கட்டுப்பட்டவன்தான் - இந்த நிபந்தனையை ஏற்றவன்தான் ஹிந்து ஆவான். தமிழ் நாட்டாரே! தமிழ் சமுதாயத்தாரே! தமிழர்களே இப்பொழுது சிந்தியுங்கள்.
நாம் ஹிந்துக்களா? ஹிந்து மதத்தவர்களா? ஹிந்து மதத்திற்கு உரிய கடவுள், மத வேத சாஸ்திர புராண இதிகாச தர்மங்கள், ஜாதிமுறைகள், அமைப்புகள் - இவை சம்பந்தமான கோயில் குளம், அவற்றின் கதைகள் - நடப்புகள் நமக்குச் சம்பந்தப்பட்டவைகளா என்று சிந்தித்துப் பாருங்கள்.
ஹிந்துமதம் நமது மதமாயிருந்தால், அதில் நாம் நம்மை ஈன ஜாதி - இழிபிறவி - நாலாம் ஜாதி - சூத்திரன் பார்ப்பானின் அடிமை - பார்ப்பானின் தாசி மக்கள் - நமது பெண்கள் பார்ப்பானுக்குத் தாசிகளாக இருக்கத் தக்கவர்கள் என்று எழுதிவைத்துக் கொண்டிருக்க முடியுமா?
“ஹிந்து”என்ற சொல் “சிந்து”விலிருந்து வந்தது
நிற்க. ஹிந்து என்றோ - இந்துமதம் என்றோ - இந்தியா என்றோ ஆரியர்களின் எந்த ஆதாரத்திலும் ஒரு இடத்திலாவது - ஒரு சொல்லாவது இல்லவே இல்லை. மத ஆதாரங்களில் காணம் படுவதெல்லாம் பாரத தேசம், பாரதம் என்றும், சமுதாயத்திற்கும் ஆரியர் என்றும், தேவர்கள் என்றும், ஆரியர்களுடைய எதிரிகளைக் குறிக்க அசுரர்கள் என்றும், அரக்கர்கள் என்றும், இராக்கதர்கள் என்றும்தான் குறிப்பிடப்பட்டிருக்கின்றனவே ஒழிய - இந்தியா, ஹிந்து என்ற சொற்கள் எந்த சாஸ்திர - புராண இதிகாசங்களிலும் மத சம்பந்தமான எந்த ஆதாரங்களிலும் காணமுடிவதில்லை.
தவிரவும் இந்தியா என்ற சொல் - ஹிந்து என்ற சொல் “சிந்து”என்னும் ஒரு நதியின் காரணமாக அதன் கரையில் வாழ்ந்தவர்களுக்கு ஏற்பட்ட பெயர் என்றும், வடமொழியில் “சி” என்பதும் “ஹி”என்பதும் ஒரே சப்தமாக மாற இடம் உண்டு என்கிற காரணத்தால் சிந்து ஹிந்து என்றாயிற்று என்றும் சொல்லுகிறார்கள். ஆங்கில அகராதிகள் சொல்வது என்ன?
பிறகு, ஹிந்துக்களைக் கொண்ட நாடு இந்தியா என்று ஆயிற்று என்றும், இந்தப் பெயரும் அந்நியரால் கொடுக்கப்பட்டதென்றும், இந்தியாவில் வசித்ததால் ஹிந்து என்று அழைக்க நேர்ந்தது என்றும், இதுவும் இஸ்லாமானவர்களாலும் வெள்ளையர்களாலும் கொடுக்கப்பட்ட பெயரே என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.
அதுவும் எந்தவிதத்திலும் தமிழர்களுக்குப் பொருந்தாது என்பதோடு, ஆரியர்களுக்குத்தான் பொருந்தும் என்பதே ஆராய்ச்சியாளர்கள் முடிவு.
ஹிந்து என்ற சொல்லுக்கு “ ஆரியர்கள்” என்ற பொருள்.மேனாட்டு அகராதிகளில் காணப்படுகின்றது. தவிரவும், ஹிந்துக்கள் என்ற சொல்லுக்கு கிறிஸ்தவர், முகமதியர் அல்லாத மக்கள் என்று ஆங்கில அகராதிகள் (டிக்சனரிகள்) கூறுகின்றன.
The concise oxboard dictionary of current English(1968 ஆம் ஆண்டு பதிப்பு) பக்கம் 516 இல் Hindu என்பதற்கு “Aryan of N. india who(also any one who) professes hindusim என்று போட்டிருப்பதுடன் இதற்குச் சமஸ்கிருத “ரூட்” என்று குறிப்பிட்டு “SINDU RIVER” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்து என்றால் அறிவற்றவன் - முட்டாள்
ஹிந்து என்ற சொல்லையும், இந்துக்கள் என்ற குழுவினரையும் மேனாட்டவர்களும் முஸ்லீம்களும் மிகமிக இழிவாகவே கருதுகிறார்கள். அதாவது, அஞ்ஞானிகள் என்றும் அறிவற்ற முட்டாள்கள் என்றும் கருதுகிறார்கள்.
மத கடவுள்கள், அக்கடவுள்களின் நடப்புகள். அவற்றின் கதைகளான புராண இதிகாசக் கூற்றுக்கள் நமக்கு எவ்விதத்திலும் சம்பந்தப்பட்டவை அல்ல என்பதைச் சிந்தித்துத் தெளியுங்கள்.
(தந்தை பெரியார் – நூல்:-“உயர் எண்ணங்கள்” பக்கம்:-26-29)
பகுப்புகள் இந்து, கடவுள், சிந்தனைகள், பெரியார், வரலாறு
+copier.jpg)





பகவத் கீதையைப் பார்த்தது உண்டா ? அனைத்தும் மாயை, ஆத்மா மட்டுமே மெய். உலகில் உள்ள அனைத்து ஆத்மாக்களையும் சமமாக பாவிக்க வேண்டும். இந்தப் பிரபஞ்சத்தில் அனைத்திலும் நான் இருக்கிறேன், ஆனால், அவைகளால் விளையும் சுகமோ துக்கமோ எதற்கும் நான் காரணமில்லை என சொல்லுகிறது கீதை. என்னமோ போங்க..இன்னும் ராமசாமி மாதிரியே விஷயம் தெரியாம பேசுறதே பெரியாரிசத்துக்கு வாடிக்கையாகி விட்டது.
எதற்கும் நான் காரணமில்லை இல்லையென்றால் அப்புறம் என்ன புண்ணாக்குக்கு அவன் எல்லாவற்றிலும் இருக்கான். இன்னும் பாப்பார பசங்க கதை சொல்கிற மாதிரியே விஷயம் தெரியாம பேசுறதே பார்பணீய அடிமைகளுக்கு வாடிக்கையாகி விட்டது.
ஆத்மா என்றால் என்ன என்று உங்களால் சொல்ல முடியுமா?
பகுத்தறிவு என்ற ஒன்றை நீங்கள் உபயோகித்து இருந்தால் ஆத்மா என்ற ஒன்று கிடையாது என்று உங்களுக்கு தெரிந்திருக்கும்....
பகுத்தறிவு உள்ளவன் பகவத்கீதையை பார்க்க மாட்டான் அய்யா?
விவேக் சொல்வது போல... இன்னும் 100 பெரியார் வந்தால் கூட உங்களை திருத்த முடியாது போல...?
நன்றி நீங்கள் பெரியாரை பற்றி படித்தற்க்கு...
//கபிலன் said... இந்தப் பிரபஞ்சத்தில் அனைத்திலும் நான் இருக்கிறேன், ஆனால், அவைகளால் விளையும் சுகமோ துக்கமோ எதற்கும் நான் காரணமில்லை என சொல்லுகிறது கீதை. //
எதற்கும் நான் காரணமில்லை இல்லையென்றால் அப்புறம் என்ன புண்ணாக்குக்கு அவன் எல்லாவற்றிலும் இருக்கான். இன்னும் பாப்பார பசங்க கதை சொல்கிற மாதிரியே விஷயம் தெரியாம பேசுறதே பார்பணீய அடிமைகளுக்கு வாடிக்கையாகி விட்டது. "
ஹாஹா... மரியாதையும், நாகரிகமும் இல்லாமல் பேசுவதிலிருந்தே புரிகிறது தரண், உண்மையான பெரியார் தொண்டர் என்பதை புரிந்து கொண்டோம். நன்றி!
அய்யா, கபிலன் அவர்களே,
ஆத்மா என்றால் என்ன என்று உங்களால் சொல்ல முடியுமா?
பகுத்தறிவு என்ற ஒன்றை நீங்கள் உபயோகித்து இருந்தால் ஆத்மா என்ற ஒன்று கிடையாது என்று உங்களுக்கு தெரிந்திருக்கும்....
பகுத்தறிவு உள்ளவன் பகவத்கீதையை பார்க்க மாட்டான் அய்யா?
விவேக் சொல்வது போல... இன்னும் 100 பெரியார் வந்தால் கூட உங்களை திருத்த முடியாது போல...?
நன்றி நீங்கள் பெரியாரை பற்றி படித்தற்க்கு... "
தோழரே...பகுத்தறிவு என்பதே படித்து ஆராய்ந்து, பின்னர் ஒரு நிலைப்பாட்டை மேற்கொள்வதே.அப்படி இருக்க பகுத்தறிவாளன் கீதையை படிக்க மாட்டான் என்கிறீர்களே ? மனம் என்பது என்ன...அறிவு என்பது என்ன? அவை எங்கிருக்கிறது என்று சொல்லுங்கள். உலகத்திலேயே சிறந்த கேள்வி, பதில் தெரியாத கேள்வியும் நீங்கள் கேட்பதே....அது தான் "நான் யார் ?" என்பது. இதற்கான வழிமுறைகளையும், வாழ்க்கை முறைகளையும் தான் கீதை விளக்குகிறது.
சமயத்தைப் பழிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் பகுத்தறிவை காற்றில் பறக்க விட வேண்டாம் தோழரே.
எங்கள் அண்ணன் சீமான் சொன்னபடி, அறிவு என்பது நமக்கு உண்டு, ஆனால மனம் என்ற ஒன்று நமக்கு கிடையாது. அறிவு மூளையை குறிக்கிறது அய்யா... மனம் எதை குறிக்கிறது... அப்படி எதுவும் இல்லை. என்பதே பொருள்.
உங்கள் மதமும் அதுபோலத்தான்...
உங்கள் மதத்திடம் எதை கேட்டாலும் தெரியாது? கடவுள் எப்படி இவ்வளவு மனிதர்களை படைத்தான் கேட்டால் தெரியாது. ”கடவுள் யார் தெரியாது?
கடவுள் - எங்கே? ஏன்? எப்படி? என்று கேட்கக்கூடாது – தந்தை பெரியார்” - இக்கட்டுரையை படித்து பாருங்கள்.
2010 வர போகுதய்யா? எதற்கு இந்த சமயமும், ஆயிரம் கடவுளும் நமக்கய்யா? நம் அறிவுதான் நமக்கு கடவுள்... அதை உபயோகித்து முன்னேற பார்ப்போம்.
எங்கள் அண்ணன் சீமான் சொன்னபடி, அறிவு என்பது நமக்கு உண்டு, ஆனால மனம் என்ற ஒன்று நமக்கு கிடையாது. அறிவு மூளையை குறிக்கிறது அய்யா... மனம் எதை குறிக்கிறது... அப்படி எதுவும் இல்லை. என்பதே பொருள்.
உங்கள் மதமும் அதுபோலத்தான்...
உங்கள் மதத்திடம் எதை கேட்டாலும் தெரியாது? கடவுள் எப்படி இவ்வளவு மனிதர்களை படைத்தான் கேட்டால் தெரியாது. ”கடவுள் யார் தெரியாது?
கடவுள் - எங்கே? ஏன்? எப்படி? என்று கேட்கக்கூடாது – தந்தை பெரியார்” - இக்கட்டுரையை படித்து பாருங்கள்.
2010 வர போகுதய்யா? எதற்கு இந்த சமயமும், ஆயிரம் கடவுளும் நமக்கய்யா? நம் அறிவுதான் நமக்கு கடவுள்... அதை உபயோகித்து முன்னேற பார்ப்போம்.
கபிலன் அவர்களே...?
எங்கள் அண்ணன் சீமான் சொன்னபடி, அறிவு என்பது நமக்கு உண்டு, ஆனால மனம் என்ற ஒன்று நமக்கு கிடையாது. அறிவு மூளையை குறிக்கிறது அய்யா... மனம் எதை குறிக்கிறது... அப்படி எதுவும் இல்லை. என்பதே பொருள்.
உங்கள் மதமும் அதுபோலத்தான்...
உங்கள் மதத்திடம் எதை கேட்டாலும் தெரியாது? கடவுள் எப்படி இவ்வளவு மனிதர்களை படைத்தான் கேட்டால் தெரியாது. ”கடவுள் யார் தெரியாது?
கடவுள் - எங்கே? ஏன்? எப்படி? என்று கேட்கக்கூடாது – தந்தை பெரியார்” - இக்கட்டுரையை படித்து பாருங்கள்.
2010 வர போகுதய்யா? எதற்கு இந்த சமயமும், ஆயிரம் கடவுளும் நமக்கய்யா? நம் அறிவுதான் நமக்கு கடவுள்... அதை உபயோகித்து முன்னேற பார்ப்போம். "
அது உங்களின் விருப்பம். உங்கள் நம்பிக்கை. நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
எங்கள் நம்பிக்கைகளை கொச்சைப் படுத்தாதீர்கள் என்று தான் சொல்கிறோம். எங்கள் சகிப்புத் தன்மையை சுரண்டிப் பார்க்காதீர்கள் என்று தான் சொல்கிறோம் தோழரே!
மன்னிச்சுக்கோங்க தோழரே!
நன்றி!
என் கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல்... ஏதேதோ சாக்கு போக்கு சொல்லுகிறீர்கள்...
உங்கள் கல் கடவுளும் இப்படிதான் அய்யா....
கடவுளை மற... மணிதனை நினை...
நன்றி நண்பரே....உங்களுக்காகவே, வெகு விரைவில் உங்கள் அண்ணனைப் பற்றிய பதிவு வெளியிடுகிறேன் வந்து பாருங்கள்.
ஆனால் நானும், என் அண்ணனும் தமிழன் என்னும் சாதியை சேர்ந்தவர்கள்தான்... அதில் அய்யமில்லை...
இந்து சமயம் என்பது பார்பண நாய்கள் பிழைக்க வேண்டி உருவாக்கப்பட்டது, நீங்களும் அந்த கூட்டத்தில் ஒருவரா? இருக்கலாம்.
ஆனால் நானும், என் அண்ணனும் தமிழன் என்னும் சாதியை சேர்ந்தவர்கள்தான்... அதில் அய்யமில்லை..."
ஹாஹா....என்னவோ போங்க...முதலில் மனிதனாக இருக்கச் சொல்லும் ஐயா.....உங்கள் அண்ணன் சைமன்(சீமான்)இந்துப் பெண்களை எத்தகைய வார்த்தைகள் கொண்டு விமர்சித்தார் என்ற கதை தெரியாது போலும். அதுமட்டுமல்ல, இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள ஒவ்வொரு கருத்தும் தவறு என்பது இன்றைய படித்த மக்கள் அனைவருக்கும் தெரியும். ராமசாமி காலத்துல ஏமாத்துன மாதிரி எல்லாம் இப்போ மக்களை ஏமாற்ற முடியாது. சரி விடுங்க.
நான் பார்ப்பனன் இல்லைங்க.
நன்றி தோழரே!
அவர் சாகும் போது கடவுள் நம்பிக்கை யொடு தான் இறந்தார்
அது அவர் புகழை குறைக்க வேண்டுமெண்று... சொன்ன கதை அய்யா....
உங்கள் கடவுள் இனம் அழிந்து வருகிறது... புதிய சிந்தனை கொண்ட இளைஞர்கள் இன்று வருகிறார்கள்... கடவுளை மற, மணிதனை நினை...