இந்திய இறையாண்மைக்காக இந்திய அரசு தம் குடிமக்களாகிய தமிழர்களை பலி கொடுக்க எப்போதும் தயங்கியதில்லை. இதுதான் ஒரு சுண்டைக்காய் நாடான இலங்கைக்கு தமிழக மீனவர்களை நிர்வாணப்படுத்தி, சித்ரவதை செய்யவும், சுட்டுக் கொல்லவும் தைரியத்தைக் கொடுத்திருக்கிறது. தமிழக தலைநகரான சென்னையில் தமிழில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ததற்காக இளம்பெண் ஒருவரை பீகாரை சேர்ந்த
ரயில்வே காவலர்கள் தாக்கியுள்ளனர். தமிழ் மீதும், தமிழர்கள் மீதும் வட இந்தியர்கள் வைத்துள்ள வெறுப்பையே இந்த சம்பவம் காட்டுகிறது. வட இந்தியர்கள் ஒரு போதும் தமிழர்களின் நலனில் அக்கறை செலுத்தப் போவதில்லை. அதற்கு தமிழ் துரோகிகளும் விடப் போவதுமில்லை.
சிங்களன் சீனாவுடன் வலுவாக கூட்டு சேர்ந்து கொண்டு இந்தியாவையும், மேற்குலக நாடுகளையும் மதிக்காமல் மிரட்டுகிறான். ராஜபக்சே சகோதரர்கள் சீனாவின் பெயரை பயன்படுத்தி இந்தியாவை எப்படி வழிக்கு கொண்டு வர வேண்டும் என்று நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்கள். இந்தியாவை முன்னிறுத்தி மேற்குலக நாடுகளின் அழுத்தங்களை சமாளித்து ஐ.நாவில் போர்க்குற்ற தீர்மானத்தை தகர்த்தார்கள், உலக வங்கி கடனைப் பெற்றார்கள், போர்க்குற்றங்களிலிருந்து விடுபட்டார்கள். இலங்கையின் நட்பு "கூடா நட்பு" என்று இந்தியாவுக்கு இப்போதைக்கு புரிய வாய்ப்பில்லை.
"எந்த ஒரு நாடும் தர்மத்தின் அச்சில் சுழலுவதில்லை. கேந்திர நலங்களை வைத்து தான் முடிவுகளை எடுக்கின்றன" என்று ஆண்டன் பாலசிங்கம் மிகத் தெளிவாக உணர்ந்து சொன்னார்.
தமிழர்களுக்கு (ஈழத்தமிழர்கள் மற்றும் தமிழக தமிழர்களுக்கும்தான்) இப்போது எது சிறந்த வழியாக இருக்கும் என்று பார்த்தால் :
1. அமெரிக்கா, மேற்குலக நாடுகள் பக்கம் சாய்வது
இந்தியா 110 கோடி மக்கள்தொகை கொண்ட உலகின் மிகப்பெரிய சந்தை. அமெரிக்கா இப்போதுதான் அணு ஆயுத ஒப்பந்தத்தை இந்தியாவுடன் மேற்கொண்டுள்ளது. 33 லட்சம் ஈழத்தமிழர்களுக்காக இந்தியாவை மேற்குலக நாடுகள் ஒரு போதும் பகைத்துக் கொள்ளப் போவதில்லை.
- பேச்சுவார்த்தை என்று சொல்லி நயவஞ்சகமாக கொலைக்களத்திற்கு புலிகளை அழைத்து வந்தார்கள்.
- பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி பல நாடுகளிலும் இயக்கத்தை தடை செய்தார்கள்.
- மனித உரிமை என்று வாயில் மட்டும் பேசி நூறாயிரம் மக்கள் சாகும் போது வேடிக்கை மட்டும் பார்த்தார்கள்.
- அமெரிக்கா தனது செய்மதிகள் மூலம் எடுத்த போர்க்குற்ற ஆதாரங்களை வெளியிடாமல் அதை ராஜபக்சேவை மிரட்ட மட்டும் பயன்படுத்துகிறார்கள். கோதபாயாவின் சமீபத்திய அமெரிக்க விஜயத்தின் நோக்கம் இதுதான்.
- உலக வங்கி கடனை நிறுத்தி வைத்திருந்த அமெரிக்கா ஹிலாரியின் இந்திய விஜயத்திற்கு பிறகு கடனை அதிகரித்து வழங்கினார்கள்.
இந்தியாவை எதிர்த்து இவர்கள் ஒரு போதும் எதுவும் செய்யப் போவதில்லை என்பது மட்டும் உண்மை.
2. மீண்டும் இந்தியா பக்கம் சாய்வது
பல புத்தி ஜீவிகள் அகிம்சை போராட்டம்தான் சிறந்தது, இந்தியாவின் உதவி இல்லாமல் ஈழம் அமைக்க முடியாது என்று தினமும் கட்டுரை எழுத ஆரம்பித்திருக்கிறார்கள்.
- அகிம்சை போராட்டம் வெள்ளைக்காரர்களிடம்தான் எடுபடும். சிங்களன் போன்ற காட்டுமிராண்டிகளிடம் அகிம்சைப் போராட்டம் ஒரு பயனையும் தராது. "ஒரு பெண் தன் மானத்தை காத்துக் கொள்ள கொலை செய்தாலும் தகும்" என்று மகாத்மா சொன்னார். மகாத்மா பிறந்த நாடான இந்தியாவே திலீபனின் அகிம்சைப் போராட்டத்தை அங்கீகரிக்கவில்லை. அகிம்சை போராட்டத்தின் முடிவில்தான் ஆயுதப் போராட்டம்
கையில் எடுக்கப்பட்டது.
- தனி ஈழக்கோரிக்கையில் தமிழ் நாட்டு தமிழர்களும் சேர்ந்து கொள்வார்கள், இலங்கையின் சீன உறவு, அமைதிப்படையின் தோல்வியால் ஏற்பட்ட கசப்புணர்வு, ஈழத்தின் பிரிவு காஷ்மீரின் பிரிவுக்கு அடிகோலி விடும் போன்றவற்றால் இந்தியா ஒருபோதும் தனி ஈழம் அமைய விடப் போவதில்லை. ஒன்றிணைந்தத இலங்கையிலும் அமைதி திரும்புவதை இந்தியா சகித்துக் கொள்ளாது. இந்தியாவுக்கு எப்போதும்
சிங்களர்களும், தமிழர்களும் அடித்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் குறிக்கோள். இந்தியாவை நம்பி மோசம் போனது போதும்.
3. சீனாவின் பக்கம் போவது
ஜே.ஆர் ஜெயவர்த்தனா தனது குள்ள நரித்தனத்தால் ஒன்றாக இருந்த இந்தியாவையும், புலிகளையும் மிகத் தந்திரமாக மோத விட்டு வேடிக்கை பார்த்தான். அதை எதிர்த்த சிங்களர்களிடம் அவன் சொன்னான் "இந்தியர்களும், தமிழர்களும் அடித்துக் கொண்டு சாகட்டும். நாம் வேடிக்கை மட்டும் பார்ப்போம்" என்று. அமைதிப்படை அனுப்பப்படாவிட்டால் ஈழம் அப்போதே அமைந்திருக்கும்.
- ஒரு பெரிய நாட்டின் உதவி இல்லாமல் போராட்ட இயக்கம் ஒன்று வெற்றி பெறுவது கடினம் என்ற சூழ்நிலையில் இந்தியாவும், அமெரிக்காவும் அந்த உதவியை செய்யாத போது மிச்சமிருக்கும் ஒரே வழி சீனாதான்.
- சீனாவுடனான இலங்கையின் நட்பு திரிகோணமலை துறைமுகத்தைமையமாக வைத்துதான் உள்ளது. ஈழம் அமைந்தால பூகோள ரீதியாக தென்னிலங்கையை விட ஈழம்தான் சீன அரசுக்கு சாதகமாக இருக்கும். ஆக தமிழர்களின் நட்பு சீனாவுக்கு சாதகமாக இருக்கும்.
- இந்தியாவின் பலவீனத்தை எப்படி சிங்களர்கள் தமக்கு பலமாக பயன்படுத்துகிறார்களோ அதே போல் தமிழர்களாகிய நாமும் சீனாவுடன் நட்பை பேண வேண்டும் (தமிழர்களின் இந்த புதிய திருப்பம் சீனாவுக்கு வயிற்றில் பாலையும், இலங்கை, இந்திய, மேற்குலக நாடுகளுக்கு புளியையும் கரைக்கும்).
- இந்தியாவின் ஒரே பயம் சீனாதான். இந்தியாவின் இறையாண்மை எப்படி ஈழத்தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் பாதகமாக இருந்ததோ அதே இந்தியாவின் இறையாண்மையை, பாதுகாப்பை சீனாவிடம் அடகு வைப்பதன் மூலம்தான் நமக்கு அமைதி கிடைக்கும், ஈழம் கிடைக்கும்.
- தமிழர்கள் சீனா பக்கம் போகப் போகிறார்கள் என்றால் இந்திய அரசு பதறியடித்துக் கொண்டு ஓடி வரும் (எங்கே ஈழமும், அதை தொடர்ந்து தமிழ்நாடும் சீனா பக்கம் போய் விடப் போகிறதோ என்று).
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் ராஜீவ் காலத்தில் சிங்களர்களுக்கும், தமிழர்களுக்கும் இந்தியா மத்தியஸ்தம் செய்தது (குழப்பியது). இப்போது அந்த வேலையை சீனாவிடம் கொடுங்கள் என்றுதான் சொல்கிறோம். சீனா இரட்டை வேடம் போட்டாலும் அல்லது தமிழர்களுக்கு உதவிகள் செய்தாலும் எப்படி பார்த்தாலும் இந்தியாவை ஒரு வழிக்கு கொண்டு வரவும், போராட்டம் தீவிரமடையவும் கண்டிப்பாக
உதவும்.
முட்டள் வட இந்தியனை விட, ஜே.ஆரிடம் ஏமாந்த முட்டாள் ராஜீவை விட, பாரில் டான்ஸ் ஆடிய சோனியாவை விட, நாராயணன்களை விட, கருநாக கருணாவை விட, நதிகளை இணைக்க வேண்டாம் என்று சொல்லிய ஜமுக்காளத்தில் வடிகட்டிய முட்டாள் ராகுலை விட சீனாக்காரன் எவ்வளவோ மேல்.
- தமிழகத்திலிருந்து அதிபதி
நன்றி: நாம் தமிழர் பேரியக்கம்.
2 Comments:
-
- UthamaPuthra said...
October 13, 2009 8:13 PMவரவேற்க வேண்டிய சிந்தனை...- மு.இரா said...
October 14, 2009 5:53 AMநன்றி உத்தமபுத்திரா...
+copier.jpg)




