இந்த கொடுமைக்காகவே எம் கவிஞன் முன்னரே பாட்டெழுதி வைத்திருக்கிறான் பாருங்கள்….
தமிழன் முதுகெலும்பைக் காணவில்லை!
தமிழன் முதுகெலும்பைக் காணவில்லை!
தலைமீது சுமக்கின்றான்
அடிமை என்னும் சொல்லை!
தமிழன் முதுகெலும்பைக் காணவில்லை!
எதிரியைத் தலைவனாய் எண்ணுகின்றான்!
எச்சிலை அவன் போடத் தின்னுகின்றான்!
எதிரிக்கே மாலைகள் சூட்டுகின்றான்!
எவனுக்கும் பல்லையே காட்டுகின்றான்!
இசை தெலுங்கானது பாட்டினிலே!
இந்தி கோல் ஒச்சுது நாட்டினிலே!
திசைதோறும் ஆங்கிலம் வாயினிலே!
தீந்தமிழ் எரியுது தீயினிலே!
ஒடுங்கி ஒடுங்கி இவன் ஆமையானான்!
உதைத்தாலும் வதைத்தாலும் ஊமையானான்!
நடுங்கி நடுங்கி இவன் வாழெதுவிட்டான்!
நாளுக்கு நாளிவன் தாழ்ந்துவிட்டான்!
உலகெல்லாம் நேற்றிவன் ஆண்டதென்ன?
ஊர் ஊராய் இன்றிவன் மாண்டதென்ன?
மலைபோல நேற்றிவன் எழுந்ததென்ன?
மரம் போல வீழ்ந்தானே வீழ்ந்ததென்ன?
- உவமைக்கவிஞர் காசி ஆனந்தன்.
பகுப்புகள் அரசியல்வாதிகள், கலைஞர், கவிதை, காசி ஆனந்தன், சமூக அவலங்கள், தமிழீழம், தமிழ்நாடு, படங்கள்
+copier.jpg)





எதிரியைத் தலைவனாய் எண்ணுகின்றான்!
எச்சிலை அவன் போடத் தின்னுகின்றான்!
எதிரிக்கே மாலைகள் சூட்டுகின்றான்!
எவனுக்கும் பல்லையே காட்டுகின்றான்!
இசை தெலுங்கானது பாட்டினிலே!
இந்தி கோல் ஒச்சுது நாட்டினிலே!
திசைதோறும் ஆங்கிலம் வாயினிலே!
தீந்தமிழ் எரியுது தீயினிலே!\\
unmai
தமிழருக்கு அவலமும் துயரும் ஒரு துளியும் குறையவேயில்லை இந்த நிதி அறியாமலா ?
சாந்தி