image

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்புச் செயலாளர் சமல் ஜயநித்தி இன்று கொழும்புவில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் மக்களின் மரணங்களுக்கும், முகாம்களில் வாழும் அவல நிலைக்கும் இந்தியாவை ஆளும் காங்கிரஸ் அரசே காரணம் என்று குற்றம் சாட்டினார்.

தமிழக எம்பிக்களின் குழுவின் வருகையால் தமிழ் மக்களுக்கு எந்த வித நன்மையும் கிடைக்கப் போவதில்லை என்றும் இது வெறும் உல்லாச பயணமாகவே அமையும் என்று கூறினார்...இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ..நல்ல கட்சியாக இருக்கிறது..? ( இங்கும் இருக்கிறார்கள் ஒன்றுக்கு இரண்டு " மொள்ளமாறிகள் "  இடது,வலது என்று, தமிழக ஓட்டுப் பொறுக்கி அரசியலில் எங்கே நாம் காணாமல் போய் விடுவோம் என்று, அவசர அவசரமாக கருத்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்...இப்பொழுது தமிழகமெங்கும் கருத்து பரப்புரை ஊர்வலம் நடத்துகிறது வலது..இடது இருக்கிறார்களே...சிகப்பு சங்பரிவார் கும்பல்..இவர்களுக்குத் தான் இப்பொழுது ஆப்பு அடித்துக் கொண்டிருக்கிறார்கள் மாவோஸ்டுகள் ..! எவ்வளவு நாள் தான் சிகப்பில் காவியை வைத்துக் கொண்டு ஏமாற்றுவது...வங்காளிகள் பெரிய புத்திசாலிகள் என்று கூறுகிறார்கள் ..? எப்படி ஏமாந்தார்கள் இவர்களிடம்...? )

மேலும் கூறுகிறார்...பாருங்கள்,  தமிழ் மக்களுக்கு எதிரான, முழுமையான யுத்ததிற்கு இந்திய அரசாங்கம் அணைத்து உதவிகளையும் இலங்கைக்கு வழங்கியது..இதன் காரணமாத்தான் பல ஆயிரக்கணக்காண தமிழ் மக்கள் மரணித்ததோடு இன்று கொடும் இடைத் தங்கல் முகாம்களில்

3 லட்சம் மக்கள் அவல வாழ்கை வாழ்கின்றனர்..இந்த படுபாதகச் செயலுக்கு பாவமன்னிப்பு பெற்றுக் கொள்வதற்கே இவர்கள் இங்கு வந்துள்ளனர்.

( அய்யா..! இந்திய ஓட்டுப் பொறுக்கி இடது வலதுகளே, கொஞ்சமாவது திருந்துங்கள் ..இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியைப் பார்த்தாவது...?! நீங்கள் திருந்த வாய்ப்பே இல்லைதான்...என்ன செய்வது, மாவோஸ்டுகள்  தான் உங்களுக்கு புத்தி சொல்ல வேண்டும் என்று விதி இருக்கும் பொழுது ...நாம் என்ன சொல்வது...?! )

உண்மையிலேயே இம்மக்களின் நன்மைக்காக இங்கு விஜயத்தை மேற்கொண்டார்கள் என்றால் ஏன் இலங்கையில் வைத்து பகிரங்கமான அறிக்கை ஒன்றை இவர்களால் விடுக்க முடியவில்லை..?

குறைந்த பட்சம் முகாம் மக்களை, சொந்த இடங்களுக்கு அனுப்பும் வரை உறவினர்களிடம் இணைந்து வாழும் உரிமையை, சந்தர்பத்தை ஏற்படுத்தி தருமாறு ஏன் கேட்கவில்லை..இலங்கை அரசை..? இலங்கையிலேயே மற்ற இடங்களில் வசிக்கலாம் முகாம் மக்களின் உறவினர்கள், அரசு சொல்வதைபோல் கண்ணிவெடிகளை அகற்றும் வரை இவர்களின் உறவினர்களிடம் சேர்ந்து வசிக்கும் சந்தர்பத்தை, உரிமையை ஏன் கோரிக்கையாகவாது வைக்கலாமே..ஏன் செய்யவில்லை இந்த சுற்றுலாக் குழு ?

இலங்கை அரசுக்கு ஒரு நோக்கம் இருக்கிறது..இவர்களின்..முகாம் மக்களின்  விடுதலை...உறங்கிக் கொண்டிருக்கும் உண்மைகள் வந்து விடும் என்று....தமிழக எம்பிக்கள் குழுவிற்கு என்ன ?

செருப்பால் அடித்திருக்கு..!  தமிழக சுற்றுலாக் குழுவை ...இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி...!

நன்றி: விண்ணகன், ஈழதேசம்.கொம்

0 Comments:

Post a Comment