இலங்கைத் தமிழர் பிரச்சினை இப்போது உலகத் தமிழர் பிரச்சினையாக மாறியுள்ளது என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப் பாளர் பழ. நெடுமாறன் தெரிவித்தார்.
'இலங்கையில் தமிழின அழிப்பு' என்ற கருத்தரங்கு சென்னை மயிலாப்பூரில் 10-10-2009ல் நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது:
இலங்கையில் முள்வேலி முகாம் களில் அடைக்கப்பட்டுள்ள 3 இலட்சம் தமிழர்களை எப்படியாவது விடுவிக்க வேண்டும். இதற்கு ஆதரவாக எலைன் சாண்டர் போன்ற மனித உரிமை ஆர் வலர்களை உலகளாவிய அளவில் நாம் திரட்ட வேண்டும்.
நமது தமிழ் இலக்கியங்கள் உலகா யத சிந்தனைகளுடன்தான் படைக்கப் பட்டுள்ளன. ஆனால், இலங்கையில் தமிழர்கள் அழிக்கப்படுவதை உலக நாடுகள் வேடிக்கை பார்த்தது வேதனை அளிக்கிறது. உலகின் மனசாட்சியை நாம் தட்டி எழுப்ப வேண்டும்.
இலங்கையில் தமிழர்கள் இது வரை நடத்தியது முதற்கட்ட போராட்டம் தான். இலங்கைத் தமிழர் பிரச்சினை இப்போது உலகத் தமிழர்களின் பிரச்சி னையாக உருவெடுத்துள்ளது.
இஸ்ரேல், பிரிட்டனைவிட இலங்கை இராணுவ மயமாகி வருகிறது.

40,000 வீரர்கள் மட்டுமே இருந்த இலங்கை இராணுவத்தில் இப்போது 3 இலட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். விரைவில் இந்த எண்ணிக்கையை 5 இலட்சமாக உயர்த்தத் திட்டமிட்டுள்ள னர்.
தங்களுக்கு நேர்ந்த கொடுமை களை இலங்கைத் தமிழர்கள் மறக் கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள். இலங்கையில் எல்லாம் முடிந்த பின் இப் போது எம்.பி.க்கள் குழு சென்றுள்ளது. அவர்கள் என்ன வந்து சொல்வார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
இலங்கைத் தமிழர்களுக்காக உல கில் உள்ள தமிழர்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்.
இலங்கைத் தமிழர் மீட்பு, பிரச் சினை குறித்து மக்களிடையே விழிப் புணர்வு பிரச்சார இயக்கம் அக்டோபர் 27, 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
சென்னையில் பா.ம.க. நிறுவனர் இராமதாஸ், ராமேசுவரத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, கன்னி யாகுமரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் தா. பாண்டியன் ஆகியோரது தலைமை யிலும் ஊட்டியில் எனது (பழ.நெடு மாறன்) தலைமையிலும் - நான்கு திசைகளிலிருந்தும் இந்தப் பிரச்சாரப் பயணம் தொடங்கும்.
நிறைவாக 29ஆம் தேதி திருச்சி யில் பொதுக்கூட்டம் நடைபெறும்.
- இவ்வாறு பழ. நெடுமாறன் பேசினார்.
வைகோ:
இலங்கையில் முள்வேலி முகாம் களில் அடைக்கப்பட்டுள்ள 3 இலட்சம் தமிழர்களும் ஜெனிவா மனித உரிமை பிரகடன விதிகளுக்கு மாறாக துன் புறுத்தப்படுகின்றனர்.
ஆனால், தமிழினத்தை இராச பக்சே அரசு அழித்ததைப் பார்வையிட எம்.பி.க்கள் குழுவை அந்நாட்டு அரசு இப்போது அழைத்ததா?

தமிழர்களின் புராதனமான ஊர் களுக்கு சிங்களப் பெயர்கள் சூட்டப் பட்டு வருகின்றன. இலங்கைப் பிரச்சி னைக்கு தமிழ் ஈழம் மட்டுமே ஒரே தீர்வு.
இந்தியாவின் பாதுகாப்பு குறித்த இந்திரா காந்தியின் தொலைநோக்குப் பார்வை இப்போது சிதைக்கப்பட்டுள் ளது. இலங்கைக் கடற்படை கப்பல்களில் சீனர்கள் வருவதாக இராமேசுவரம் பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடு களால் தமிழகத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்கள் எழுந்துள்ளன - என்றார் வைகோ.
மரு. இராமதாசு :
இலங்கைக்குச் சென்றுள்ள எம்.பி.க்கள் குழு, மட்டக்களப்புக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாக வீர கேசரி இதழின் இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
அங்குள்ள முகாம்களை எம்.பி.க் கள் சுதந்திரமாகச் சென்று பார்வையிட முடியாது. இப்பயணத்தின் முடிவு நாம் அறிந்ததுதான்.
தமிழ் மக்களை அழித்த இராசபக் சேவுக்கு பாடம் புகட்ட தமிழ் ஈழத்தை மலரச் செய்வது ஒன்றே வழி. வழிதவறிச் செல்லும் நமது இளைஞர்களிடையே தமிழ் உணர்வை ஊட்ட வேண்டும்.
இலங்கைப் பிரச்சினைக்கு ஆதர வாக தமிழ் மக்களை நாம் ஒருங்கிணைக்க வேண்டும். காலம் நிச்சயம் மாறும் என்றார் இராமதாஸ்.
இலங்கை முகாம்களில் வாடும் ஈழத்தமிழர்களை விடுவிக்கக்கோரி
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சென்னையில் ஆர்ப்பாட்டம்
டாக்டர் இராமதாஸ், வைகோ,
பழ.நெடுமாறன் பங்கேற்பு
இலங்கையில் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை விடுவிக்கக்கோரியும், சிங்கள இனவாத அரசின் அடக்குமுறையைக் கண்டித்தும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னையில் 10-10-09-ல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மெமோரியல் ஹால் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் தலைமை தாங்கினார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி, முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர்
சி. மகேந்திரன், கொங்கு இளைஞர் பேரவை நிறுவனர் தனிஅரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு வந்தவர்கள், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் படத்தை கையில் ஏந்தி நின்றனர். இலங்கையில் முள்வேலி முகாம்களில் உள்ள தமிழர்களை உடனே விடுவிக்க வேண்டும் என்றும் நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
நாடு கடந்த தமிழீழத்தை அமைப்பதற்கு அனுமதி வழங்கிய ஐந்து நாடுகள் தொடர்பில் இலங்கை அதிருப்தி.
நாடு கடந்த தமிழீழத்தை அமைப்பதற்கு அனுமதி வழங்கிய ஐந்து நாடுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. கனடா, பிரிட்டன், அமெரிக்கா, நோர்வே மற்றும் தென் ஆபிக்கா ஆகிய நாடுகள் இவ்வாறு தமிழீழ கோட்பாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாடு கடந்த தமிழீழம் அமைக்கும் பணிகளுக்கு அனுமதி வழங்கிய குறித்த நாடுகளின் செயற்பாடுகள் அதிருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
ஈழ இராச்சியத்தை அமைப்பதற்காக நடவடிக்கை மேற்கொண்டு வரும் 59 பேருக்கு எதிராக குறித்த நாடுகள் சட்ட நடவடிக்கை எடுக்காம பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
இவ்வாறு ஈழ இராச்சியத்தை அமைப்பதற்காக முயற்சிகளை மேற்கொண்டு வருவோர் குறித்த பட்டியல் தமக்குக் கிடைக்கப் பெற்றுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
+copier.jpg)





மலயாளிகளின் குரங்கு வேலையால்,தமிழ் இனம் அழிவில்:
இந்தியா வேறு:தமிழர்கள் வேறு