Showing newest 13 of 24 posts from September 2009. Show older posts
Showing newest 13 of 24 posts from September 2009. Show older posts

image

முத்தமிழ் வித்தகர் என்றும்-மூத்த

தமிழ் மகன் என்றும் -முடி

சூடும் கலைஞர் பெருமானே-தாங்கள்

இன்று முதல் கொலைஞர் பெருமான் ஆகுக!

பாதிக் காலம் பதவியில் இருந்து விட்டும்

மீதிக் காலமும் பல்லக்கில் பவனி வரும் கனவானே

சேற்றுக்குள் புழுவாய் செந்தமிழன் சீரழிதல்

கண்டும் சினம் கொள்ளா தன்மான சிங்கமே!

மனைவி துணைவி என்ற வாழ்வுண்டு - மக்கள்

மூவர்க்கு மகத்தான பதவியுண்டு - சுற்றம்

சூழலுக்கும் பேரக்கொளுந்துகளுக்கும் - சொந்தமாய்

டி.வீயுண்டு - உடன் பிறப்புகளுக்கு மட்டும் ?

உடுத்த உடையுமில்லை உண்ண உணவுமில்லை

பிஞ்சு மழலைகளுக்கு கஞ்சிக்கும் வசதியில்லை

இல்லை என்பதே நிறைந்து கிடக்குது - தமிழன்

உயிர்கள் மட்டுமே மலிந்து கிடக்குது.

குளிரை போர்த்தி உறங்குகிறார் - எம்மினம்

கழி நீர் போல வாழ்கின்றார் - உயிரை

கூட கொடுக்கிறோம் - மு.க

எங்கள் உணர்வை மட்டும் கொள்ளாதே!

மானாட மயிலாட மகிழ்ச்சி தான் - குறைப்

பாவடையில் தாயினம் தேய்மானம்

ஆவதும் குளிர்ச்சி தான்- பண்பட்ட தமிழுக்கு

உங்களின் பங்கு ஓங்குக! - ஓரிரு

நொடியேனும் எங்களின் அலறலை - உலகுக்கு

சொல்லுமையா !  - பாதக் கமலதிட்கு

செருப்பை இருக்கிறோம் - நெருப்பாய்

இருக்க வேண்டியவரே - ஏன்

இப்படி செருப்பாய் இருக்கிறீர்?

தமிழச்சி மார்பில் தான் மழலை

பசி தீர்தீரோ? பிறகேன் பன்றி

கூட்டத்திடம் - பல்

இழித்து நிற்கிறீர்?

இளைப்பாறும் போதிலேனும் தமிழனுக்கு

எள்ளளவேனும் ஏதும் செய்குக!

உளியின் ஓசை வடித்தவரே - எங்கள்

வலியின் ஓசை மட்டும் கேட்கலையோ?

வீழ்வது மு க வகா இருப்பினும்  எழுவது

தமிழினமாய் இருக்கட்டும்.- வெல்க தமிழ்!

நன்றி: Logan Tharan naamtamilar.org

clip_image002வைகுந்த பதவியும் சிவலோகவாசத்தையும் தங்களுக்காகக் கேட்ட அந்த முனிவர்களையும், அவர்கள் பாடிய பாடல்களையும் இந்தத் திருமணத்தில் அழைப்பதும் பாடுவதும் பொருத்தமற்றதுதானே. இங்கே வந்தாலும் அவர்கள் தங்களுக்குத்தான் எதையாவது கேட்பார்களே தவிர, நமக்காக ஒன்றும் பேச மாட்டார்கள், கேட்க மாட்டார்களே! ஆகவேதான் இங்கே எந்தப் பக்தரையும் சரி, அய்யரையும் சரி நாங்கள் அழைக்கவில்லை; அழைப்பதும் இல்லை. அதைப்போலவே நமக்காக எழுதப்படாத பாடப்படாத எந்தப் பாடலையும் பாடுவதில்லை, பாடவும் விடுவதில்லை.

நம்மைப் பற்றியும் நமது வாழ்க்கையைப்பற்றிம் கவலைப்படும், அக்கறை காட்டும், நண்பர்களைத்தான் நாம் அழைக்கிறோம். அப்படிப்பட்டவர்களால்தானே நாம் முன்னேற வழிவகைகளைக் காட்ட முடியும், கூற முடியும். ஆகவே தேவாரம் பாடவில்லை. திருவாசகம் படிக்கவில்லை, அய்யரைக் கூப்பிட்டு மந்திரம் ஓதவில்லை என்பதற்காக எவரும் கவலைப்படத் தேவையில்லை என்பதை மறுமுறையும் வலியுறுத்திக் கூறுகிறேன்.

கடைசியாக, சில பெரியவர்கள் இங்கே அம்மி மிதித்து அருந்ததி காட்டவில்லை, அக்கினி வளர்க்கவில்லை, ஆண்டவனைப் போற்றவில்லை என்று குறைபடுவதற்கும் அர்த்தம் இல்லையென்றும் சொல்லிவிடுகிறேன்.

திருமணத்தில் அக்கினி வளர்ப்பது எதற்காக? திருமணத்திற்கு அக்கினிதேவன் சாட்சியாக இருக்கிறான் என்பதற்குத்தானே! அந்த அக்கினி பகவான் யோக்கியதை என்ன? அருந்ததி என்று ஒரு சினிமாக்கூட வந்ததே, அதைப் பார்த்தவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும், நான் கூறப்போவது,

ஒரு காலத்தில் சப்தரிசிகள் ஒரு யாகம் செய்தன ராம். அந்த யாகத்திற்குச் சென்று அவிர்பாகம் வாங்கிச் சென்ற அக்கினி பகவான் அந்த ஏழு இரிஷிபத்தினிகளின் மீதும் காமமுற்றானாம். இதனை வெட்கத்தை விட்டு தன் மனைவியிடமே கூறினார். இந்தக் காலத்தில் எப்படிப்பட்ட கேடு கெட்ட மனிதனும்கூட கட்டிய மனைவியிடம், தான் பிற பெண்ணின் மீது ஆசை வைத்திருப்பதாகக் கூறமாட்டான்.

ஆனால், ஆண்டவனான அக்னி தன் மனைவியிடம் தான் இரிஷிபத்தினியிடம் காமமுற்று இருப்பதைக் கூறிய உடன் தன் மனைவியையே அதற்கான ஏற்பாடுகளையும் செய்யும்படி கேட்டானாம். அவன் மனைவியும் சப்தஇரிஷிகளில் ஆறு பேர்களின் மனைவியரைப் போலவே உருவெடுத்து தன் கணவனின் காமத்தைத் தடுத்தாளாம். ஆனால், ஏழாவது முனிவரின் மனைவியான அருந்ததியைப்போல மட்டும் உருவம் எடுக்க முடியவில்லை என்றும் அதற்குக் காரணம் அருந்ததி ஆதிதிராவிடப் பெண்மணி என்றும் புராணம் கூறகிறது. பிறர் மனைவியை காமுறும் தீய குணம் படைத்த அக்னியையா நம்முடைய திருமணக் காலங்களில் சாட்சிக்கு அழைப்பது? கூடாது கூடவே கூடாது.

- சுயமரியாதைத் திருமணத்தில் அண்ணா சொற்பொழிவு.

மதம் மாறக் கூடாது என்று பிறவி முட்டாள் மட்டுமே சொல்வான்

clip_image001

மதத்தை மாற்றிக் கொள்வது என்பது, ஒருவரின் பெயரை மாற்றிக் கொள்வது போலத்தான். மதத்தை மாற்றிக் கொண்ட பிறகு பெயரையும் மாற்றிக் கொள்வது, உங்களுக்குக் கூடுதல் பயனளிக்கும். ஒருவர் தன்னை முஸ்லிம், கிறித்துவர், பவுத்தர், சீக்கியர் என்று அழைத்துக் கொள்வது, வெறும் மதமாற்றம் மட்டும் அல்ல; பெயர் மாற்றமும்கூட. மதமாற்றத்திற்கான இந்த இயக்கத்தைத் தொடங்கும்போதுகூட, பலரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்களுடைய எதிர்ப்புகளில் உண்மை இருக்கிறதா என்று இனி பார்ப்போம்.

நம்முடைய முன்னோர்கள் இந்த மதத்தில் இருந்தார்கள் என்பதற்காகவே நாமும் அந்த மதத்தில் நீடித்திருக்க வேண்டும் என்று பிறவி முட்டாள் மட்டுமே சொல்வான். எந்த சாதாரண மனிதனும் மதம் மாறக் கூடாது என்ற கருத்தை ஒப்புக் கொள்ள மாட்டான். இதுபோன்ற வாதத்தை முன்னிறுத்தும் எவரும் வரலாற்றைப் படிக்கவே இல்லை என்பதுதான் உண்மை.

பழங்கால ஆரிய மதம், வேத மதம் என்று அழைக்கப்பட்டது. இது, ­அன்று தனித்த கூறுகளைக் கொண்டிருந்தது. மாட்டிறைச்சி தின்பது, மது அருந்துவது, கும்மாளமடிப்பது. அன்றைய மதத்தின் முக்கிய பகுதியாக இம்மூன்றும் இருந்தது. இந்தியாவில் ஆயிரக்கணக்கான மக்கள் இதைப் பின்பற்றினர். இன்றைக்கும்கூட சில பேர் இத்தகைய வாழ்க்கை நிலைக்குத் திரும்ப வேண்டும் என்று கனவு காண்கின்றனர்.

நம்முடைய மூதாதையர்களின் மதமே பின்பற்றப்பட வேண்டும் என்றால், இந்திய மக்கள் இந்து மதத்தைக் கைவிட்டுவிட்டு பவுத்தத்தை ஏன் தழுவினர்? வேத மதத்திலிருந்து ஏன் தங்களை விடுவித்துக் கொண்டனர். எனவே, இந்து மதம் என்பது நமது மூதாதையர்களின் மதம் அல்ல; இது, நம்மீது திணிக்கப்பட்ட அடிமைத்தனமே.

இந்து சமூகத்தைச் சீர்திருத்துவது, நம்முடைய நோக்கமோ, செயல் திட்டமோ அல்லவே அல்ல. நம்முடைய நோக்கம் சுதந்திரம் பெறுவது. வேறு எந்த வேலையும் நமக்கில்லை. நாம் மதமாற்றத்தின் மூலம் சுதந்திரத்தை அடைய முடியும் எனில், இந்து மதத்தைச் சீர்திருத்தும் பொறுப்பை ஏன் சுமக்க வேண்டும்? நம்முடைய பலத்தையும் உடைமைகளையும் நாம் ஏன் இதற்காகத் தியாகம் செய்ய வேண்டும்? நம்முடைய இயக்கத்தின் நோக்கம், இந்துமத சீர்திருத்தம் என்று ஒருவர்கூட தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. நம்முடைய இயக்கத்தின் நோக்கம், தீண்டத்தகாத மக்களுக்கு சமூக விடுதலையைப் பெற்றுத் தருவதே ஆகும். மதம் மாறாமல் நாம் இந்த விடுதலையைப் பெறவே முடியாது.

தீண்டத்தகாத மக்களுக்கு சமத்துவமும் தேவை என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால், இந்துவாக இருப்பதால் மட்டுமே ஒருவன் சமத்துவத்தை அடைய முடியும் என்றும், இல்லை எனில் முடியாது என்றும் எவருமே சொல்ல முடியாது. சமத்துவத்தை அடைய இரு வழிகள் உள்ளன. 1. இந்து மதத்தில் இருப்பது; 2. இந்து மதத்தை விட்டு விலகி மதம் மாறுவது.

இந்து மதத்தில் இருந்து கொண்டு எப்படி சமத்துவத்தை அடைய முடியும்? ஒருவன் தீண்டத்தகுந்தவனாகவோ, தீண்டத்தகாதவனாகவோ இருக்கக் கூடிய உணர்வைப் போக்குவது மட்டுமே பிரச்சினையைத் தீர்த்து விடாது. கலப்புத் திருமணத்தாலும், கலந்துண்ணுவதாலுமே சமத்துவத்தை அடைய முடியும்.

இதற்கு ‘சதுர்வர்ணம்' (நான்கு வர்ணம்) அழிக்கப்பட வேண்டும்; பார்ப்பன மதம் வேரறுக்கப்பட வேண்டும். இது சாத்தியமாகுமா? இல்லை எனில், இந்து மதத்தில் இருந்து கொண்டு சமத்துவத்தை எதிர்பார்ப்பது விவேகமாகுமா? இதன் மூலம் சமத்துவத்தை ஏற்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறுமா? ஒருபோதும் வெற்றி பெறாது.

மதமாற்றப் பாதை இதைவிட மிகமிக எளிதானது. இந்து சமூகம், öவஸ்லிம்களையும் கிறித்துவர்களையும் சமமாக நடத்துகிறது. மிகத் தெளிவாக, மதமாற்றத்தின் மூலமே சமூக சமத்துவத்தைப் பெற முடியும். இது உண்மை எனில், இந்த எளிமையான வழியை நீங்கள் ஏன் பின்பற்றக் கூடாது?

1936 ஆம் ஆண்டு மே மாதம் 30, 31 ஆகிய இரு நாட்கள் இயோலாவில் நடைபெற்ற மாபெரும் மாநாட்டில் ஆற்றிய பேருரை.

image

நாம் மாறுதலுக்குக் கட்டுப்பட்டவர்களும், ஆசைப்பட்டவர்களும் ஆவோம். ஆதலால், அந்த மாறுதலேதான் - அதுவும் அறிவு, ஆராய்ச்சி ஆகிய காரணங்களைக் கொண்டு இந்தத் திருமண முறையில் காணப்படுகிற மாறுதல்கள் ஏற்பட்டவைகளாகும்.

பகுத்தறிவு என்று சொல்வதும் மாறி மாறி வருவதாகும். இன்று நாம் எவை எவைகளை அறிவுக்குப் பொருத்தமானவை என்று எண்ணுகிறோமோ அவை நாளைக்கு மூடப் பழக்க வழக்கங்கள் எனத் தள்ளப்படலாம். நாம்கூட பல பொருள்களை, ஏன் - மகான்கள் என்று புகழப்படுபவர்கள் சொன்னவற்றையே ஒதுக்கிவிடுவோம். அது போலத்தான், நமது பின்னோர்கள் என்னைக் குறித்துக்கூட, ஒரு காலத்தில், ‘இராமசாமி என்ற மூடக் கொள்கைக்காரன் இருந்தான்’ என்று கூறலாம். அது இயற்கை; மாற்றத்தின் அறிகுறி; காலத்தின் சின்னம்.

பழைய காலத்தைச் சேர்ந்தவை என்பதற்காக நாம் குறை கூறவில்லை. அவர்கள் காலத்திற்கு அவர்கள் செய்தது சரி என்பதானாலும், அப்பொழுது அவ்வளவுதான் முடிந்தது என்பதானாலும் இன்று மாறித்தான் ஆகவேண்டும். சிக்கிமுக்கிக் கல்லால் முதலில் நெருப்பை உண்டாக்கியவன் அந்தக் காலத்து ‘எடிசன்’. அப்புறம் படிப்படியாக முன்னேற்றமாகி இப்பொழுது மின்சாரத்தில் நெருப்பைக் காண்கிறோம்! எனவே, மாற்றம் இயற்கையானது. அதைத் தடுக்க யாராலும் முடியாது. எத்தகைய வைதிகமும் மாற்றத்திற்குள்ளாகித்தான் தீரவேண்டும்.

இப்பொழுது நாம் எவ்வளவு மாறி இருக்கிறோம்? 50 வருடங்களுக்கு முன்பு இருந்ததைவிட கடவுளைப்பற்றிய எண்ணம் - வீடு, வாசல், உடை, உணவு, தெருக்கள், வண்டி, குடுமி வைத்தல் ஆகிய எண்ணங்களில், பொருள்களில் பெரிய மாற்றத்தைக் காண்கிறோம். பெண்களின் புடவை, இரவிக்கை, நகைகள், புருஷன் - பெண்சாதி முறை ஆகியவற்றில் ஏற்பட்ட மாறுதல்களைப் பாருங்கள்! அடுத்தபடியாக பொருள் செலவும் அதிகமில்லை; நேரமும் பாழாவதில்லை!

image மனிதனுடைய அறிவுப் பெருக்கமும் அனுபவ முயற்சியும் இந்த அதிசயங்களுக்குக் காரணம் என்றும், அதனாலேயே அக்கால மனிதர்களைவிட இக்கால மனிதர்கள் அறிவு, அனுபவம் பெற்றவர்கள் என்றும் சொல்ல வேண்டியிருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் உள்ள இந்தக் காலத்தில் நாம் மற்ற காரியங்களில் ஏற்பட்ட அறிவுத் திறனையும், அதிசய சக்திகளையும் அனுபவித்துக் கொண்டு, இந்தக் கேடுகெட்ட - மானம் கெட்ட இழிநிலைக்குக் காரணமான அர்த்தமற்ற, சூழ்ச்சிகரமான, காட்டுமிராண்டிக் காலத்தில் ஏற்பட்ட மதம், கடவுள்கள், சாத்திரம், சடங்கு, சாதி, மதக்குறி, உயர்வு - தாழ்வு பேதம், அறிவுக்குப் பொருந்தாத அர்த்தமற்ற கொள்கைகள் ஆகியவற்றைக் கடைப்பிடித்துக் கொண்டு ஈன வாழ்வு வாழ்வது, எப்படி அறிவுடையவர் ஒப்புக் கொள்ளக்கூடிய காரியமாகும்?

அறிவுதான் கடவுள் என்பான் பண்டிதன். ஆனால், அவன் கற்பிக்கிற - வணங்குகிற கடவுள், உலகில் உள்ள எல்லா அயோக்கியத்தனங்களும் கொண்டதாக இருக்கும். அழகுதான் கடவுள் என்பான். ஆனால், அவலட்சணமான தோற்றங்கள் எல்லாம் அவன் கற்பித்துள்ள கடவுள்களில் பிரதிபலிக்கும். உயர்ந்த மக்கட்கு வழிகாட்டும் நல்ல நடத்தைகளும் உபதேசங்களும் நிறைந்தனவே புராணங்கள், சாத்திரங்கள் என்று கூறுவான். ஆனால், அவைகளில் கூடா ஒழுக்கங்களும் இழி தன்மைகளும் ஏராளமாக இருக்கும். அவைகளுக்குக் காரணம், அவைகள் ஏற்பட்ட காலத்தைச் சிந்திக்காமல் - ஏற்படுத்தியவர்களின் தன்மைகளை அறியாமல், தங்களின் பெருமைகளைக் காட்டிக் கொள்ளவும், தங்கள் பிழைப்புக்கு வழி தேடவும் அவைகளைப் பயன்படுத்த வேண்டியதாகி விட்டதால் அவர்களின் நிலைமை பரிதவிக்கத் தக்கதாகி விட்டது.

பகுத்தறிவுக்குத் தடைகள்

பகுத்தறிவு என்பது மனிதனுக்கு ஜீவநாடி உயிர்நாடி ஆகும். ஜீவராசிகளில் மனிதனுக்குத்தான் பகுத்தறிவு உண்டு. இதில் மனிதன் எவ்வளவுக் கெவ்வளவு தாழ்ந்த நிலையில் இருக்கிறானோ அவ்வளவுக்கவ்வளவு காட்டுமிராண்டி என்பது பொருள்.

பகுத்தறிவு பெறும்படியான சாதனம் நமக்கு நீண்டநாட்களாகவே தடைப் படுத்தப்பட்டு வந்துள்ளது. நம்மை அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய பார்ப்பனர்கள் நாம் பகுத்தறிவு அடைய முடியாமல் தடை செய்துகொண்டு வந்தார்கள்.

மக்களிடையே பகுத்தறிவைத் தடைப்படுத்த கடவுள், மதம், சாஸ்திரம் முதலியவைகளைப் புகுத்தி, அவைகளை மக்கள் நம்பும்படி செய்து விட்டார்கள். கடவுள் என்றால் ஒத்துக் கொள்ளவேண்டும். எங்கே? ஏன்? எப்படி? என்று கேட்கக்கூடாது என்று கூறிவிட்டார்கள். இதைப்போலவே மதத்திற்கும் - என்ன? எப்படி? என்று சிந்திக்கக் கூடாது என்று கூறி விட்டார்கள். இதைப் போலத்தான் சாஸ்திரமும்.

இதில் நாம் பகுத்தறிவு என்றால் என்ன என்பதற்கு விளக்கம் காண்கிறோம். பகுத்தறிவு என்பது ஆதாரத்தைக் கொண்டு தெளிவடைவது; மூடநம்பிக்கை என்பது ஆராயாமல் ஏற்றுக்கொள்வது என்பது பொருள். நமது இழிநிலை, நமது முட்டாள்தனம் மாறவேண்டுமானால் நாம் ஒன்றும் பெரிய கஷ்டப்பட்டு முயற்சி செய்யவேண்டியதில்லை. பகுத்தறிவு கொண்டு தாராளமாகச் சிந்தித்தால் போதும்.

நமது கொள்கை பகுத்தறிவு; பகுத்தறிவு என்றால் நாத்திகம் என்பது பொருள். அறிவுகொண்டு சிந்திப்பதுதான் நாத்திகம் ஆகும். கடவுள் மனதுக்கும், வாக்குக்கும் எட்டாதது என்று கூறப்பட்டாலும் அதுதான் உலகத்தை உண்டாக்கி நம்மை எல்லாம் நடத்துகின்றது; எல்லாவிதமான சர்வசக்திகளும் உடையது என்று கூறப்படுகிறது.

அப்படிப்பட்ட கடவுள் நம்மைத் தவிர்த்து மற்ற உலகுக்கு ஒன்றுதான். ஆனால் நமக்குத்தான் ஆயிரக்கணக்கில் கடவுள்கள்!

நம்மைத் தவிர்த்த மற்ற உலகிற்கு - கடவுளுக்கு உருவம் இல்லை; நமது கடவுள்களுக்கோ பல்லாயிரக்கணக்கான உருவங்கள். மற்ற நாட்டுக் கடவுள்களுக்கு ஒன்றும் வேண்டியதில்லை; நமது நாட்டுக் கடவுள்களுக்கோ மனிதனுக்கு வேண்டியது எல்லாமுமே வேண்டும். மற்ற நாட்டுக்காரர்கள் கடவுள் - யோக்கியம், நாணயம், ஒழுக்கம் உடையது என்று உண்டாக்கி இருக்கிறார்கள். நமது நாட்டுக் கடவுள்களுக்கோ இந்த ஒழுக்கம், நாணயம் எதுவும் கிடையாது. மனிதனில் கீழ்த்தரமானவனுக்கு என்னென்ன குணங்கள் இருக்குமோ அவைகள் அத்தனையும் கடவுளுக்கு ஏற்றிவிட்டிருக்கிறார்கள். இப்படி ஏராளமான பேதங்களையும் நடப்புக்கு ஒவ்வாத காரியங்களையும், காரியத்திற்குக் கேடான குணங்களையும் கடவுளுக்குக் கற்பித்திருக்கிறார்கள்.

இவைகளை எல்லாம் நம்புவதுதான் மூடநம்பிக்கை, நல்லவண்ணம் சிந்தித்து ஆராய்ந்து, ஏற்கவேண்டியதை ஏற்றுக்கொண்டு, மற்றதைத் தள்ளிவிடுவதுதான் பகுத்தறிவு. நாம் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பார்த்தால், பகுத்தறிவுக்கு ஏற்ற கடவுள் இருக்கிறதா என்று சிந்தித்துப்பார்த்தால், இல்லவே இல்லை; உண்மையில் ஒரு கடவுள் இருக்குமானால் நமக்குத் தெரியாமல் இருக்கவேண்டிய அவசியம் என்ன? அந்தக் கடவுள் தாம் இருப்பதாக நமக்காவது ஏன் தெரியப்படுத்தக்கூடாது?

ஆகவே, மக்கள் இவற்றை எல்லாம் அறிவுகொண்டு சிந்தித்தல் வேண்டும். அறிவு கொண்டு சிந்திப்பதுதான் பகுத்தறிவு. பகுத்தறிவுக்குத் தடையாக இருப்பதும், சிந்திக்க வொட்டாத நிலையை ஏற்படுத்தி வைப்பதும் கடவுள் பற்றிய மூடநம்பிக்கைதான் என்பதையும் இவற்றிற்கெல்லாம் முன்னோடிகளான பார்ப்பனர்களின் சதியையும் மக்கள் உணரவேண்டும்; சிந்திக்க வேண்டும்.

சிந்தனைதான் அறிவை வளர்க்கும்; அறிவுதான் மனித வாழ்வை உயர்த்தும்.

- ‘விடுதலை’ தலையங்கம் 20-6-1973

image

ஹிந்துமதம் என்பதும், ஹிந்துமத சம்பந்தமான சாஸ்திரங்கள், கடவுள்கள், கடவுள் கதைகள், நடத்தைகள் முதலியவைகள் எல்லாம் தமிழனுக்கோ, தமிழ்நாட்டிற்கோ சம்பந்தப்பட்டதல்ல; சிறிதளவும் சம்பந்தப்பட்டதல்ல. அவை யாவும் எந்தத் தமிழனாலும் ஏற்பட்டவையுமல்ல; அவற்றுள் எவையும் எதுவும் தமிழ்மொழியில் தமிழ்நாட்டில் செய்யப்பட்டவையுமல்ல.

இவையாவும் அந்நிய மொழியாகிய வட மொழியிலும், தமிழன் - தமிழ் நாட்டினன் அல்லாதவனான அந்நியன் மொழியாகிய ஆரிய மொழியிலும் வட நாட்டானான ஆரியனாலுமே ஏற்படுத்தப்பட்டவை, செய்யப்பட்டவையுமே ஆகும்.

ஆரியன் இங்கே வந்து “அய்யர்” ஆனான்

அது போலவேதான் ஜாதி என்பதும், ஜாதி முறை என்பதும், ஜாதி அமைப்பு என்பதும், தமிழ்நாட்டிற்கோ தமிழர் சமுதாயத்திற்கோ ஏற்றதுமல்ல; தமிழ் பழக்க வழக்கங்களுக்கு, தமிழர் வாழ்விற்கு ஏற்றவையுமல்ல; ஏனென்றால், இவை யாவும் யாவற்றுக்கும் ஏற்பட்ட நடப்பு எதுவும் தமிழ்மொழியில்லை என்பதோடு, தமிழர் சமுதாயத்தில் இருந்தவையுமல்ல; தமிழரால் உண்டாக்கப்பட்டவையுமல்ல.

ஜாதியானது, எப்படி வெள்ளைக்காரன் நம் நாட்டுக்கு வந்து “துரை”ஆனானோ - முஸ்லீம் எம்படி நம் நாட்டுக்கு வந்து, “சாயபு”ஆனானோ - அதுபோல் ஆரியன் நம் நாட்டுக்கு வந்து “அய்யர்” ஆனான்; “பிராமணன்” ஆனான்; “பிராமணாள்” ஆனான்.

பார்ப்பானைப்போல வேதத்தைத் தொட்டாலும் தீட்டு

பார்ப்பானுக்குக் குறிப்புப் பெயர் வேதியன் என்பதாகும். வேதியன் என்றால் வேதத்திற்கு உடையவன் என்பதுதான் பொரும். அந்த வேதம் எந்த விதத்திலும் தமிழர்களுக்குச் சம்பந்தப்பட்டதல்ல; தமிழர்களுக்கு உரியதுமல்ல; தமிழுமல்ல; தமிழரால் ஆக்கப்பட்டதுமல்ல. எப்படி ஆரியன் (பார்ப்பான்) கடவுள், தமிழன் தொட்டால் தீட்டு ஆகிவிடும் - கெட்டுப்போகும் என்று சொல்லப்படுகிறதோ, அதுபோலவே வேதமும் தமிழன் தொட்டாலும், அதைப் படித்தாலும், காதில் கேட்டாலும் கெட்டுவிடும். பார்ப்பான அல்லாதவன் பார்த்து கேட்டுவிட்டால், அவன் குருடனாக ஆக வேண்டும் - செவிடனாக ஆகவேண்டும் என்பது பார்ப்பனர் நிபந்தனை ஆகும்.

இதையேதான் சற்றேறக்குறைய பார்ப்பன ஆதாரங்களாகிய சாஸ்திர - தர்ம சாஸ்திர - புராணங்களுக்குமே பார்ப்பனர் நிபந்தனை விதித்து இருக்கிறார்கள். இவைகள்தான் இந்துமத தர்மம் ஆகவும் - இந்து மதக் கொள்கை ஆகவும் இன்றும் தமிழ்நாட்டில் நடப்பில் இருந்துவருவதுமாகும்; இவைதான் இந்துமதத் தர்மமும் ஆகும்.

நமது மதமாயிருந்தால் நாம் ஏன் ஈனஜாதி இவற்றிற்குக் கட்டுப்பட்டவன்தான் - இந்த நிபந்தனையை ஏற்றவன்தான் ஹிந்து ஆவான். தமிழ் நாட்டாரே! தமிழ் சமுதாயத்தாரே! தமிழர்களே இப்பொழுது சிந்தியுங்கள்.

image

நாம் ஹிந்துக்களா? ஹிந்து மதத்தவர்களா? ஹிந்து மதத்திற்கு உரிய கடவுள், மத வேத சாஸ்திர புராண இதிகாச தர்மங்கள், ஜாதிமுறைகள், அமைப்புகள் - இவை சம்பந்தமான கோயில் குளம், அவற்றின் கதைகள் - நடப்புகள் நமக்குச் சம்பந்தப்பட்டவைகளா என்று சிந்தித்துப் பாருங்கள்.

ஹிந்துமதம் நமது மதமாயிருந்தால், அதில் நாம் நம்மை ஈன ஜாதி - இழிபிறவி - நாலாம் ஜாதி - சூத்திரன் பார்ப்பானின் அடிமை - பார்ப்பானின் தாசி மக்கள் - நமது பெண்கள் பார்ப்பானுக்குத் தாசிகளாக இருக்கத் தக்கவர்கள் என்று எழுதிவைத்துக் கொண்டிருக்க முடியுமா?

“ஹிந்து”என்ற சொல் “சிந்து”விலிருந்து வந்தது

நிற்க. ஹிந்து என்றோ - இந்துமதம் என்றோ - இந்தியா என்றோ ஆரியர்களின் எந்த ஆதாரத்திலும் ஒரு இடத்திலாவது - ஒரு சொல்லாவது இல்லவே இல்லை. மத ஆதாரங்களில் காணம் படுவதெல்லாம் பாரத தேசம், பாரதம் என்றும், சமுதாயத்திற்கும் ஆரியர் என்றும், தேவர்கள் என்றும், ஆரியர்களுடைய எதிரிகளைக் குறிக்க அசுரர்கள் என்றும், அரக்கர்கள் என்றும், இராக்கதர்கள் என்றும்தான் குறிப்பிடப்பட்டிருக்கின்றனவே ஒழிய - இந்தியா, ஹிந்து என்ற சொற்கள் எந்த சாஸ்திர - புராண இதிகாசங்களிலும் மத சம்பந்தமான எந்த ஆதாரங்களிலும் காணமுடிவதில்லை.

தவிரவும் இந்தியா என்ற சொல் - ஹிந்து என்ற சொல் “சிந்து”என்னும் ஒரு நதியின் காரணமாக அதன் கரையில் வாழ்ந்தவர்களுக்கு ஏற்பட்ட பெயர் என்றும், வடமொழியில் “சி” என்பதும் “ஹி”என்பதும் ஒரே சப்தமாக மாற இடம் உண்டு என்கிற காரணத்தால் சிந்து ஹிந்து என்றாயிற்று என்றும் சொல்லுகிறார்கள். ஆங்கில அகராதிகள் சொல்வது என்ன?

பிறகு, ஹிந்துக்களைக் கொண்ட நாடு இந்தியா என்று ஆயிற்று என்றும், இந்தப் பெயரும் அந்நியரால் கொடுக்கப்பட்டதென்றும், இந்தியாவில் வசித்ததால் ஹிந்து என்று அழைக்க நேர்ந்தது என்றும், இதுவும் இஸ்லாமானவர்களாலும் வெள்ளையர்களாலும் கொடுக்கப்பட்ட பெயரே என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.

அதுவும் எந்தவிதத்திலும் தமிழர்களுக்குப் பொருந்தாது என்பதோடு, ஆரியர்களுக்குத்தான் பொருந்தும் என்பதே ஆராய்ச்சியாளர்கள் முடிவு.

ஹிந்து என்ற சொல்லுக்கு “ ஆரியர்கள்” என்ற பொருள்.மேனாட்டு அகராதிகளில் காணப்படுகின்றது. தவிரவும், ஹிந்துக்கள் என்ற சொல்லுக்கு கிறிஸ்தவர், முகமதியர் அல்லாத மக்கள் என்று ஆங்கில அகராதிகள் (டிக்சனரிகள்) கூறுகின்றன.

The concise oxboard dictionary of current English(1968 ஆம் ஆண்டு பதிப்பு) பக்கம் 516 இல் Hindu என்பதற்கு “Aryan of N. india who(also any one who) professes hindusim என்று போட்டிருப்பதுடன் இதற்குச் சமஸ்கிருத “ரூட்” என்று குறிப்பிட்டு “SINDU RIVER” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்து என்றால் அறிவற்றவன் - முட்டாள்

ஹிந்து என்ற சொல்லையும், இந்துக்கள் என்ற குழுவினரையும் மேனாட்டவர்களும் முஸ்லீம்களும் மிகமிக இழிவாகவே கருதுகிறார்கள். அதாவது, அஞ்ஞானிகள் என்றும் அறிவற்ற முட்டாள்கள் என்றும் கருதுகிறார்கள்.

மத கடவுள்கள், அக்கடவுள்களின் நடப்புகள். அவற்றின் கதைகளான புராண இதிகாசக் கூற்றுக்கள் நமக்கு எவ்விதத்திலும் சம்பந்தப்பட்டவை அல்ல என்பதைச் சிந்தித்துத் தெளியுங்கள்.

(தந்தை பெரியார் – நூல்:-“உயர் எண்ணங்கள்” பக்கம்:-26-29)

clip_image001கடவுள்களை வழிபடுவது என்பது, எங்கும் சாதாரணமாக வழக்கில் உள்ளது. ஆனால் பெண் கடவுள்களை வழிபடுவது சாதாரணமானதல்ல. காரணம், கடவுள்கள் பொதுவாக திருமணமாகாதவர்களாகவே இருக்கிறார்கள். பெண் கடவுள்கள் என்று உயர்த்தி வைப்பதற்கு, கடவுள்களுக்கு மனைவிகள் இல்லை. கடவுளை மணமானவராகக் கருதுவது, எந்தளவுக்கு மனம் ஒவ்வாததாக இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக, ஏசுவைக் கடவுளின் மகன் என்று யூதர்களை ஏற்கச் செய்வது, தொடக்கக் காலத்தில் கிறித்துவர்களுக்கு எவ்வளவு கடினமாக இருந்தது என்பதைக் குறிப்பிடலாம்.

கடவுளுக்கு மணமாகவில்லை என்றும், அதனால் ஏசு எப்படிக் கடவுளின் மகனாக இருக்க முடியும் என்றும் யூதர்கள் கேட்டார்கள்.

இந்துக்கள் விஷயத்தில் நிலைமை முற்றிலும் வேறு விதமாக உள்ளது. அவர்கள் ஆண் கடவுள்களை வழிபடுவது மட்டுமின்றி, பெண் கடவுள்களையும் வழிபடுகிறார்கள்...

இதுவரை கூறியதிலிருந்து இரண்டு விஷயங்கள் தெளிவாகின்றன. ஒன்று, இந்துக் கடவுள் திருமணம் செய்து கொள்ள முடியும் என்பதும், அவர் சாதாரண மனிதனைவிட உயர்வாக நடந்து கொள்ளவில்லை என்பதால், அவரோ, அவரை வழிபடுகிறவர்களோ கூச்சப்பட வேண்டியதில்லை என்பதும் ஆகும். இரண்டாவது, கடவுளின் மனைவி அவரை மணந்து கொள்ளும் காரணத்தாலேயே, அந்தக் கடவுளை வழிபடுபவர்களின் வழிபாட்டுக்குத் தகுதி பெற்றுவிடுகிறார்.

வேத காலத்தைவிட்டு புராண காலத்திற்கு வந்தால், பல பெண் கடவுள்களின் பெயர்களைக் காண்கிறோம்: தேவி, உமா, சதி, அம்பிகை, பார்வதி, ஹேமாவதி, கவுரி, காளி, நிர்நிதி, சண்டி, காத்யாயினி, துர்கை, தஷ்புஜா, சிங்கவாகினி, மகிஷாசுர மர்த்தினி, ஜகதாத்திரி, முக்தகேசி, தாரா, சின்னமுஸ்தகா, ஜதக் கவுரி, பிரத்யங்கிரா, அன்னப்பூர்ணா, கணேஷ் ஜனனி, கிருஷ்ணக்ரோரா, லட்சுமி ஆகியோர். இந்தப் பெண் கடவுள்களில் யார் எவர் என்ற பட்டியலை வரைவது கடினம். முதலாவதாக இந்தப் பெயர்கள் ஒவ்வொன்றும் தனித்தனி பெண் கடவுள்களைக் குறிக்கின்றனவா அல்லது ஒரே பெண் கடவுளின் வெவ்வேறு பெயர்களா என்று கூறுவதும் கடினம். இதேபோல இவர்களின் தாய் தந்தை யார் என்று கூறுவதும் கடினம். இவர்களின் கணவர்கள் யார் என்பதையும் யாரும் உறுதியாகக் கூற முடியாது...

இதில் சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய மூவரும் ஒரே கடவுளின் வெவ்வேறு வடிவங்கள் என்பதாகக் காட்ட முயலுகின்றனர். இவர்களில் சரஸ்வதி பிரம்மாவின் மனைவி, லட்சுமி விஷ்ணுவின் மனைவி, பார்வதி சிவனின் மனைவி என்பதையும், இந்த மூன்று கடவுள்களும் ஒருவரோடு ஒருவர் போரிட்டுக் கொண்டிருந்தார்கள் என்பதையும் பார்க்கும்போது, வராகப் புராணம் கூறும் விளக்கம் விந்தையாக உள்ளது.

கவுரி யார்? பார்வதியின் மற்றொரு பெயர் தான் கவுரி என்று புராணம் கூறுகிறது. இதற்குக் காரணம் பின்வருமாறு கூறப்படுகிறது: சொர்க்கத்தில் சிவனும் பார்வதியும் ஒன்றாக இருக்கும்போது, அவர்களிடையே சிறு சிறு சண்டைகள் வரும். அப்படியொரு நேரத்தில் சிவன் பார்வதியின் கருப்பு நிறத்தை சுட்டிக்காட்டி அவரைச் சீண்டினார். இதனால் மன வருத்தம் அடைந்த பார்வதி, சிலகாலம் சிவனை பிரிந்து சென்று கடும் தவம் புரிந்தார். அதன் விளைவாக பிரம்மா அவருடைய மேனி பொன் நிறமாக விளங்கும் என்று வரம் கொடுத்தார். இதனால் அவருக்கு கவுரி என்று பெயர் வந்தது.

மற்ற பெண் கடவுள்களைப் பார்த்தால், அவை ஒரே பெண் கடவுளின் வெவ்வேறு பெயர்களா? அல்லது தனித்தனி கடவுள்களா? என்று உறுதியாகத் தெரியவில்லை...வேதத்தில் கூறப்படும் பெண் கடவுள்களையும் புராணங்களில் கூறப்படும் பெண் கடவுள்களையும் ஒப்பிட்டுப் பார்ப்பது வரலாற்றை எழுதுவது மட்டுமின்றி, அதற்குப் பொருள் கூறுவதையும் பணியாகக் கொண்டுள்ள ஒரு மாணவனுக்கு தவிர்க்க முடியாததாகும். ஒரு விஷயத்தில் இந்த இரண்டு வகை பெண் கடவுள்களுக்கிடையே பெரிய வேறுபாடு உள்ளது.

வேதத்தின் பெண் கடவுள்கள், கடவுள்களின் மனைவியர்களாக இருந்ததின் காரணமாகத்தான் வணங்கப்பட்டார்கள். புராணப் பெண் கடவுள்கள் அப்படியல்லர். இவர்கள் கடவுள்களின் மனைவியர் என்பதினாலன்றி, தங்களுடைய சொந்த முறையிலேயே வழிபாட்டைப் பெறுகிறார்கள். இந்த வேறுபாட்டிற்குக் காரணம், வேதப் பெண் கடவுள்கள் போர்க்களத்திற்கு சென்றதோ, வீரச்செயல்கள் புரிந்ததோ கிடையாது. ஆனால், புராணங்களின் பெண் கடவுள்கள் போர்க் களம் சென்று பெரும் வீரச் செயல்கள் புரிந்துள்ளார்கள். துர்கைக்கும் இரண்டு அசுரர்களுக்கும் இடையே பெரும் போர் நடந்ததாகக் கூறப்படுகிறது. இதுவே துர்கைக்கு பெரும் புகழைக் கொடுத்தது...

தொடரும்…

(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் தமிழ் நூல் தொகுப்பு : 8, பக்கம்: 131)

image

இந்தியத் துணைக்கண்டத்திலேயே தேசிய இனவுணர்வில் முன்னுக்கு நின்றது நம் தமிழ்த் தேசம் - காசுமீரத்துக்கு அடுத்தபடி என்று வேண்டுமானால்சொல்லலாம்.

1965ஆம் ஆண்டின் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம் என்பது ஒரு தமிழ்த் தேசிய எழுச்சியே. இந்த எழுச்சியின் அலைவிளிம்பில் ஏறிச் சென்றுதான் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தின் மாநில ஆட்சியைக் கைப்பற்றிக்காங்கிரஸ் ஏகபோகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

மாநில ஆட்சி என்பது அதிகாரமில்லாத அதிகாரம். பதவிக் கட்டிலில் படுத்துத் தூங்கிய தி.மு.க. அதன்பின் விழிக்கவே இல்லை. 1967 முதல் வடிந்து வற்றிய தமிழ்த் தேசிய எழுச்சி 1980களில் தமிழீழ மக்களின் விடுதலைப் போர்த் தாக்கத்தால் புத்துயிர் பெற்றது. அது வளர்ந்து செல்வதைத் தடுக்கும் பொருட்டுத் தமிழீழ மக்கள் போராட்டத்தை அடுத்தும் எதிர்த்தும் கெடுக்கப் பார்ப்பனியம் சூழ்ச்சி செய்து அதில் பெருமளவு வெற்றியும் கண்டது.

இராசீவ் காந்தியின் இந்திய வல்லாதிக்க அரசியலும், அதன் நீட்சியானஇராணுவப் படையெடுப்பும் தமிழீழ மக்களுக்கு இழைத்த கொடுமைகளைமறைத்து விட்ட கட்சிகளும் ஊடகங்களும்... அவரது கொலையைச் சாக்கிட்டுத் தமிழக மக்களைத் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் திசை திருப்புவதில் பெருமளவு வெற்றி கண்டன. கடந்த 17 ஆண்டுகளுக்கு மேலாகக் கடுமையான நெருக்கடி களுக்கிடையே தமிழீழ ஆதரவுச் சுடரை அணையாமல் காத்துவந்தவை தமிழகத்தின் தமிழ்த் தேசிய ஆற்றல்களே. இதற்காக நாம் பெருமிதம்கொள்ளலாம்.

தமிழீழ ஆதரவுக் கட்சிகளாக அறியப்பட்டுள்ள மற்றக் கட்சிகளைப் பொறுத்தவரை அவ்வப்போது தமிழீழப் போராட்டத்துக்கு ஆதரவாகக் குரல்கொடுத்திருப்பதை நாமும் மதிக்கிறோம். ஆனால் இவை தம் தமிழீழ ஆதரவைத்தேர்தல் - கூட்டணி அரசியலுக்கு உட்படுத்தியே வந்துள்ளன. தமிழீழ விடுதலைப்போராட்டத்தை இந்திய அரசு அறிந்தேற்க (அங்கீகரிக்க) வேண்டும், விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்பன போன்ற தெளிவானகோரிக்கைகளை இந்தக் கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்துவதும் இல்லை.

இந்தப் பின்னணியில்தான் கடந்த ஓராண்டு காலமாக ராசபட்சர்தலைமையிலான சிங்களப் பேரினவாத அரசு போர் நிறுத்தத்தைக் கைவிட்டுத்தமிழீழ மக்கள் மீது தொடுத்துள்ள கொடும்போர் தமிழகத்தில் ஓர் எதிர்வினையைத் தோற்றுவித்துள்ளது. குறிப்பாகக் கடந்த நான்கைந்து மாதகாலமாகத் தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான எழுச்சி தோன்றி யுள்ளது. அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல், கட்சி சாராக் குடியியல் சமுதாயத்தைச்சேர்ந்தவர்களும் - வழக்கறிஞர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், தகவல் - தொழில்நுட்பர்கள், திரைக் கலைஞர்கள் - தமிழீழ மக்களைக் காக்கக் குரல்கொடுத்து வருகின்றனர்.

2008 அக்டோபர் 14இல் தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் தீர்மானங்கள் பற்றி நாம் முன்பே எழுதியுள்ளோம். அடுத்தடுத்து மனிதச் சங்கிலி, சட்டப் பேரவைத் தீர்மானம், தில்லிக்குத் தூது... என்று பல்வேறு வகையிலும்தமிழக மக்களின் உணர்வுகள் தில்லிக்கு உணர்த்தப்பட்டுள்ளன. ஆனால் தில்லிப்பேரரசு இந்த உணர்வுகளைத் துச்சமாக மதித்துச் செயல்பட்டு வருகிறது.

படைக்கலன்கள், படைப் பயிற்சி, போரியல் அறிவுரை, படைத் துறையினரின் நேரடிப் பங்கேற்பு, உளவுத் துணை, நிதியுதவி என்று சிங்கள அரசின் போர்முயற்சிக்கு எல்லா வகையிலும் இந்திய அரசு உடந்தையாக இருந்து வருவதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது. ஒரு பக்கம் பாகிஸ்தானுடன் போர்முழக்கம் செய்து கொண்டே, மறு பக்கம் சிங்களப் படைக்கு உதவுவதில் பாகிஸ்தானுடன் இந்தியாவும் கூட்டாகச் செயல்பட்டு வருவது அண்மையில்அம்பலமாகியுள்ளது.

இந்திய அரசின் இந்தத் தமிழர்ப் பகைப் போக்கில் ஒருசில அதிகாரிகள் மற்றவர்களைக் காட்டிலும் முனைப்பாக இருக்கலாம். ஆனால் இந்த அதிகாரிகளே எல்லாவற்றுக்கும் பொறுப்பு என்று சொல்லி ஆளும்காங்கிரசையும், திமுக உள்ளிட்ட அதன் கூட்டணிக் கட்சிகளையும் காப்பாற்றும் முயற்சியை ஏற்பதற்கில்லை. ஆளும் கட்சி அல்லது கூட்டணி எதுவானாலும் இந்திய அரசு அடிப்படையில் தமிழீழத்துக்கும் தமிழர்களுக்கும் எதிராகச் செயல்பட்டு வருவதே வரலாறு.

தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி முதலில் போர் நிறுத்தம், ஆயுத உதவி நிறுத்தம் ஆகிய கோரிக்கைகளை எழுப்பினார். பிறகு போர் நிறுத்தத்தை மட்டும் கேட்கலானார். அனைத்துக் கட்சியினருடன் தில்லி சென்று தலைமையமைச்சரைச் சந்தித்த பின் "பிரணாபை கொழும்புக்கு அனுப்புங்கள்' என்று கெஞ்சும் நிலைக்குப் போய்விட்டார். பிரணாப் கொழும்பு சென்றாலும் போரை நிறுத்தச் சொல்வாரா? அல்லது தொடர்ந்து நடத்தச் சொல்வாரா? என்றுகேட்கக் கூட கருணாநிதி அணியமில்லை.

அனைத்துக் கட்சிக் கூட்டத் தீர்மானத்தின்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவார்கள் என்ற அச்சுறுத்தலிலிருந்து திமுக பின்னடித்துவிட்டது. சரி, மற்றக் கட்சிகளாவது அந்த அச்சுறுத்தலைச் செயலாக்கியிருந்தால், அதாவது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளைத் துறந்திருந்தால், தில்லிக்கு ஒரு நெருக்குதலை ஏற்படுத்தியிருக்க முடியும். ஆனால் எந்தக் கட்சியும் அப்படிச் செய்யவில்லை. ஏன் என்பதற்கு இதுவரை பொருத்தமான விளக்கமும் இல்லை. திமுக பொதுக்குழுவே பிரணாபைக் கொழும்புக்கு அனுப்பும்படி கோரிக்கைத் தீர்மானம் இயற்றும் பரிதாப நிலை ஏற்பட்டது. சென்னை வந்த மன்மோகன் சிங் பிரணாபை விரைவில் கொழும்புக்கு அனுப்புவதாக மீண்டும் உறுதியளித்துள்ளார். பிரணாபை அப்படியெல்லாம் நினைத்த போது கொழும்புக்கு அனுப்ப முடியாது என அமைச்சர் டி.ஆர். பாலுவே பொதுக்குழுவின் கன்னத்தில் அறை விட்டாற் போல் விடை சொல்லியிருக்கிறார்.

ஈழத் தமிழ் மக்களுக்காகத் தில்லியிடம் ஒரு துரும்பைக் கூடக் கிள்ள முடியாத கருணாநிதி சகோதரக் கொலை பற்றியெல்லாம் பேசித் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பழித்தார். இந்தத் தூற்றலின் உச்சமாக மாவீரர் துயிலும் இல்லங்களையே கேலி செய்து தமிழீழ மக்களுக்காக இன்னுயிர் தந்தவர்களின் புனித நினைவையே கொச்சைப்படுத்தினார். இதையெல்லாம் பொறுத்துக் கொண்டால், கலைஞர் ஈழத் தமிழர்களுக்கு நல்லது நடக்கச் செய்வார் என்று நம்பியிருந்தவர்கள் இலவு காத்த கிளி ஆனார்கள்.

அ.இ.அதிமுக தலைவி செயலலிதா தமிழினப் பகைவர். கருணாநிதியை அகற்றிவிட்டு நாற்காலியைப் பிடிப்பதற்காக எதுவும் செய்யக் கூடியவர். ஈழத்தமிழர்களுக்காக அனுதாபப்படுவது போல் "சில நாள் மட்டும் நடிக்க வந்தவர்' (இவருக்காகவே இந்த வரியைப் பாடலில் சேர்த்தவர் கண்ணதாசன்) விரைவில் தன் இந்துத்துவ உள்ளுருவை வெளிப்படுத்திக் கொண்டார். தன் கூட்டணியில் இருப்பவர்கள் ஈழம் பற்றி மாறுபட்டுப் பேசுவதை இவர் சகித்துக் கொள்கிறார் என்பது பொய்த் தோற்றமே. ஏதோ கத்தட்டும் என்று வேடிக்கை பார்ப்பார், கடிக்க முற்பட்டால் அடித்து விரட்டி விடுவார். இந்த வகையில் இவரது அணுகுமுறையும் கருணாநிதியின் அணுகுமுறையும் ஒன்றே. சிபிஎம் கட்சி ஈழத்தமிழர்களை இந்த அளவுக்கு வெறுப்பது ஏன்? என்று பலரும் கேட்கின்றனர். அதன் இந்தியத் தேசிய வெறிதான் காரணம்.

இந்தியத் தேசிய நிலைப்பாட்டில் இருந்தாலும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி ஈழத் தமிழர் இனப்படுகொலைக்கு எதிராக நிலையெடுத்து அண்மைக் காலத்தில் போராடி வருவது நன்று. ஆனால் இன்னமும் இக்கட்சியினால் தமிழீழ விடுதலைக் குறிக்கோளைத் திட்டவட்டமாக ஏற்க முடியவில்லை. விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கு! என்ற கோரிக்கையையும் அது எழுப்பவில்லை - இது வரை!

தமிழீழ மக்களைக் காக்க இந்தியா தலையிட வேண்டும்! என்ற கோரிக்கையின் அப்பாவித் தனத்தை அண்மைய வரலாறு வெளிப்படுத்தி விட்டது. இந்தியா ஏற்கெனவே தலையிட்டுத்தான் உள்ளது - சிங்கள அரசுக்கு ஆதரவாக! இந்தத் தலையீட்டை நேருக்கு நேர் எதிர்க்க வேண்டும். இந்தியா தமிழர்களைப் பகைவர்களாகக் கருதிச் செயல்பட்டுக் கொண்டிருக்கை யில், "தமிழர்களாகிய நாங்களே இந்தியாவின் நண்பர்கள்' என்று இன்சொல் பேசிக் கொண்டிருப்பதால் பயனில்லை. தமிழீழ மக்களுக்கு எதிரான சிங்கள அரசின் போருக்கு இந்தியா உதவியும் ஆதரவும் வழங்குவது என்ற நிலைபோய், இந்தியாவே சிங்களப் படைகளைக் கருவியாகக் கொண்டு இந்தப் போரை நடத்துவது என்ற நிலை வந்துவிட்டதைக் கிளிநொச்சி தெளிவாகப் புலப்படுத்தி விட்டது.

இந்தியா கொடுத்தபயிற்சியைக் கொண்டு இந்தியா கொடுத்த படைக்கலன்களால் இந்தியாவின் வழிகாட்டலுடன் சிங்களப் படை தமிழ் மக்கள் மீது போர் தொடுத்துள்ளது என்பதேசாரமான உண்மை.

தமிழர்கள் தில்லியைக் கொஞ்சிக் கெஞ்சும் ("தாசா' செய்யும்) அணுமுறையைக் கைவிட வேண்டும். தில்லியை எதிர்த்துப் போராடி நெருக்குவதே சரியான அணுகுமுறை. தமிழீழத் தேசியத்தை முரணின்றி ஆதரிக்கத் தமிழ்த் தேசிய நிலைப்பாடு தேவை. எப்படியும் இந்திய வல்லாதிக்கத் தொடர்பு நிலைப்பாடாவது தேவை. ஒரு சில நண்பர்கள் தமிழ்த் தேசியத்தை முன்னெடுப்பதாகச் சொன்னாலும், வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் இந்திய இறையாண்மைக்கும் ஒருமைப் பாட்டுக்கும் வணக்கம் சொல்வதை வழக்கமாகவைத்துள்ளனர். ஈழத் தமிழர்களை ஆதரிக்கிறோமே தவிர இந்திய இறையாண்மையை எதிர்க்கவில்லை என்று தன்னிலை விளக்கம் தந்துகொள்கின்றனர். இவர்கள் ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது இந்திய இறையாண்மை என்பது தமிழ்த் தேசிய இறையாண்மையை மறுப்பது ஆகும். தமிழ்த் தேசியத்தின் அரசியல் சாரம் தமிழ்த் தேசிய இறையாண்மையை மீட்கப் போராடுவதே ஆகும். மேலும், இந்தியக் குடிமக்களாக இருப்பதாலேயே இந்திய இறையாண்மையையும் ஒருமைப் பாட்டையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற சட்டக் கட்டாயம் எதுவுமில்லை. ஒரு மாற்றுக் கருத்து என்ற அளவில் கூட இந்திய இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும்மறுக்கத் துணியாதவர்களைத் தமிழ்த் தேசியத்தில் மெய்யான அக்கறை கொண்டவர்கள் என்று நம்புவது கடினமாய் உள்ளது.

நமது தமிழ்த் தேசியம் என்பது இந்திய இறையாண்மையையும் ஒருமைப் பாட்டையும் மறு தலித்துத் தமிழக இறையாண்மையையும் தமிழ்த் தாயகத்தையும் மீட்கப் போராடுவது ஆகும். தமிழகம் தொடர்பாகவும் சரி, தமிழீழம் தொடர் பாகவும் சரி, இந்திய மயக்கம் நமக்கில்லை. தமிழீழ மக்களின் போராட்டம் அவர்களின் சாதனைகளும் வேதனைகளும் - தமிழர்களை இந்திய மயக்கத்திலிருந்து விடுபடச் செய்து வருகின்றன. தமிழீழ விடுதலைப் போர் சிங்களப் பேரின வாதத்துக்கு எதிரானதாக மட்டும் பார்க்கப்பட்ட நிலை மறைந்து விட்டது. அதனை இந்திய வல்லாதிக்கம் தனக்கு எதிரானதாகப் பார்க்கிறது. அமெரிக்க வல்லாதிக்கமும் பயங்கரவாத எதிர்ப்பு என்ற போர்வையில் எல்லாத் தேசிய விடுதலைப் போராட் டங்களையும் எதிர்ப்பது போலவே ஈழ விடுதலைக்கு எதிராகவும் முனைப்புக் காட்டுகிறது. பிரிட்டன், சீனா, உருசியா போன்றவல்லரசுகளும் சிங்களத்தின் பக்கம் நிற்கின்றன. இந்தக் கொலைகாரக் கூட்டணிக்குத் தலைமை வகிப்பது இந்தியாவேதான்.

தமிழகத்தின் இறையாண்மையை மறுக்கும் இந்தியா தமிழீழத்தின் இறையாண்மையையும் மறுத்து நிற்கிறது. சிங்கள இறையாண்மைக்கு எதிரான ஒவ்வொன்றையும் இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகப் பார்த்து ஒடுக்க முற்படுகிறது. இரண்டாம் உலகப் போருக்கு முன் இட்லரின் பால் கொஞ்சிக் கெஞ்சும் கொள்கையை கடைப்பிடித்த மேலை வல்லரசுகளின் பட்டறிவு நமக்கோர் எச்சரிக்கை. இட்லரின் வழித்தோன்றல் தான் இராசபட்சர். இராசபட்சரின் இராசகுரு தான் மன்மோகன் சிங். இவரை எதிர்த்து முறியடிக்கலாமே தவிர, கொஞ்சிக் கெஞ்சி எதையும் அடைய முடியாது.

இன்னமும் இந்திய மயக்கத்திலிருக்கும் தமிழர்கள் இனியாவது அதிலிருந்து விடுபட வேண்டும். இது ஈழப் போராட்டம் நமக்களித்த கொடையாக இருக்கட்டும். மயிலே மயிலே என்றால் இறகு போடாது... இந்தியாவும் இப்படித்தான்... பிடுங்க வேண்டும்… நாம் பிடுங்குவோம்.

image

மனிதன் தன் வாழ்க்கையில் குழந்தைப் பருவம் முதல் கிழப்பருவம் வரை அடையும் தன்மையும் இயற்கையின் தத்துவமேயாகும். அவனுடைய அங்கங்கள் (உறுப்புகள்) குழந்தைப் பருவம் முதற்கொண்டு சிறிது சிறிதாக வளர்ந்து கொண்டே வருகின்றன. அந்த வளர்ச்சி அவன் உண்ணும் ஆதாரங்களையும் மன நிம்மதியான வாழ்க்கையையும் பொறுத்ததாகும்.

இப்படி வளர்ச்சியடையும் உடல் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு வந்தவுடன், அதன் பிறகு வளருவது நின்று விடுகிறது. பிறகு அவ்வுறுப்புகளுக்குக் கொடுக்கப்படும் சக்திகளுக்கு ஏற்றவாறு இயங்கும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன. அந்த உறுப்புகள் எத்தனை நாளுக்குத்தான் அப்படியே இருக்க முடியும்? அவையும் ஒரு குறிப்பிட்ட காலம்வரை இயங்கும் சக்தியைக் கொண்டவைகளாக இருக்கின்றன. நாளடைவிலேயே அங்கங்களுக்குள்ள சக்தி சிறிது சிறிதாகக் குறைவதற்கு ஆரம்பிக்கிறது. இப்படியே ஒவ்வொரு அங்கமும் பலவீனம் அடைந்து வரும் காலத்தில் மனிதன் கிழப்பருவத்தை அடைந்து கொண்டே வருகிறான்.

கிழப்பருவம் வளர்ச்சியடைந்து கொண்டே வந்து, முற்றிலும் கிழத்தன்மை அடைந்தவுடன், உடலின் உறுப்புகள் யாவையும் ஒருவித சக்தியும் இன்றி அங்கும் இங்கும் அசையக்கூட போதிய சிறிதளவு பலம்கூட இல்லாமல் போய்விடுகின்றன. அத்தன்மை வந்தவுடன் மனிதன் உடலினுள் இருக்கும் உறுப்புகளும் அதே தன்மையை அடைந்து உண்ணும் உணவை ஜீரணிக்கவும் அதைப் பக்குவம் செய்து சத்தைக் கிரகிக்கும் உறுப்புகள் போதிய பலமும் இன்றிப் போய் உணவும் செய்வதற்கும் இல்லாமல் போய்விடுகிறது. பின்பு மனிதனுக்கு இறுதியில் எஞ்சி நிற்பது காற்று ஒன்றுதான். அக்காற்று மூக்குக்கும் சுவாச உறுப்புகளுக்கும் இடையில் உள்ள துவாரத்தின் வழியே போய்வந்து கொண்டிருக்கிறது.

சுவாசிக்கும் காற்றில் மனிதன் பிராணவாயுவை உட்கொண்டு கரியமிலவாயுவை வெளியிடுகிறான். அந்த ஆராய்ச்சிப்படி இதுவரை அவன் பிராண வாயுவைக் கிரகித்து கரியமில வாயுவை வெளியிட்டு வருகிறான். இந்தத் தன்மையும் ஏற்பட சுவாச உறுப்புகள் பலமுடன் இருந்து இயங்கினால்தானே முடியும்? ஆனால் இயற்கையின்படி எல்லா உறுப்புகளும் பலவீனம் அடைந்தது போல் சுவாச உறுப்புகளும் பலவீனம் அடைய ஆரம்பிக்கின்றன. அவைகளுக்குப் போதிய அளவு அதாவது ஒரு சிறிது அளவு காற்றையாவது இழுத்து கிரகிக்கும் பலம் உள்ள வரை மனிதன் மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்குகிறான் என்று கூறுகிறோமே அந்த நிலையை அடைகிறான்.

image

இறுதியில் அந்தப் பலம்கூட இல்லாமல் சுவாச உறுப்புகள் முற்றிலும் பலவீனம் அடைந்து விடுவதால் சிறிதுகூட காற்றைச் சுவாசிக்க முடியாமல் போய் விடுகிறது. அப்போதுதான் மனிதன் இறந்து விடுகிறான் என்று சொல்லப்படுகிறது. அவன் உடலில் காற்று போய் உடல் உறுப்புகளையும் இரத்தத்தையும் சுத்தம் செய்து கொண்டு வந்ததன் காரணமாக உடலில் எந்தவிதக் கெடுதலும் ஏற்படுவதில்லை. சுவாசிக்கப்பட்ட பிராணவாயு உடம்பில் உள்ள இரத்தத்தைச் சுத்தம் செய்வதனால் சுத்தம் செய்யப்பட்ட இரத்தம் பரவிய உடலின் தசைகள் கெட்டுப் போகாமல் இருக்கின்றன.

ஆனால் மனிதன் இறந்தவுடனோ சுவாசம் இல்லை. அதனால் உடலின் தசைகள் கெடுவதற்கு ஆரம்பிக்கின்றன. அந்தப் பிணம் எவ்வளவு நேரம் இருக்கிறதோ அதற்குத் தகுந்தபடிக் கெட்டுப் போய்விடும். அதைத் தகுந்தபடி எரித்துவிடாமலோ இருக்கப்பட்டுவிடுமானால் அந்த உடல் அழுகிக் கொழகொழுத்துப் போய் சகிக்க முடியாதபடி துர்நாற்றமடிக்க ஆரம்பிக்கிறது. அதற்கென்றே உடலைப் புதைத்தோ அல்லது எரித்தோ விடுகிறார்கள். இப்படி மனிதன் பிறந்தது முதல் இறந்ததுவரை உண்டாகும் சம்பவங்கள் அத்தனையையும் நேரில் காணுகிறோம். சுவாசிக்கும் காற்று நின்றவுடன் உடலை அடக்கம் செய்கிறார்கள்.

இத்தன்மை மனிதன் என்று சொல்லப்படுபவர்கள் அத்தனை பேருக்கும் அவ்வித முடிவுதான். தாழ்ந்த ஜாதி என்று ஆக்கப்பட்டிருப்பவர்களுக்கும் இதே நிலைதான். மேல்ஜாதி, கடவுளுக்கும் அடுத்த ஜாதி என்று ஆக்கப்பட்டிருப்பவர்களுக்கும் இந்நிலைதான். அவன் யோக்கியனானாலும், முனிவரானாலும், சித்தரானாலும், மகாபக்திமான் ஆனாலும், கடவுள் அவதாரம் ஆனாலும், தியாகி ஆனாலும், மற்றும் மந்திரியானாலும் நாட்டின் தலைவன் என்பவன் ஆனாலும், இன்னும் புலவன், சிற்பி, பாடகன், ஓவியன் மற்றும் எப்பேர்பட்ட வெங்காயமானாலும், இந்த நிலையை அடைந்தே தீர வேண்டும்; இது இயற்கையேச் ஆகும்.

இப்படி மனிதனுக்கு மட்டுமல்ல; உயிர் உள்ளது என்று எவை எவை சொல்லப்படுகின்றனவோ அவைகள் அத்தனையும் இப்படிப்பட்ட இயற்கைத் தன்மையை அடைந்தே தீருகின்றன - மரம் பட்டுப் போய்விட்டது என்றால், அது வளர்ச்சி இன்றிப் போய்விட்டது என்பது பொருள். அதுமுதல் அந்தப் பட்டுப்போன மரம் காய்ந்துபோக ஆரம்பிக்கிறது; ஒருவித ஈரப்பசையும் இன்றி வெற்றுக் கட்டையாக ஆகிவிடுகிறது. இப்படியே உயிருள்ளது என்பவைகள் அத்தனையும் செத்துப் போகும் நிலையை அடைகின்றன.

செத்துப் போகுதல் என்பது சத்துப் போய்விடுதல் என்பது பொருள். வளருவதற்கு வேண்டிய சத்துக்கள் என்னென்னவோ அத்தனையும் இல்லாமல் போய்விட்ட பிறகு, அதாவது சத்துப்போய்விட்ட பின் அதை சத்துப் போகுதல் என்பது செத்துப் போகுதல் என்று ஆகி இருக்கிறது.

மரம் செத்துப் போனவுடன் அதை அடுப்பு எரிக்க உபயோகிக்கிறோம். நாய், மாடு, கழுதை செத்தவுடன் புதைக்காவிடில் அழுகிப் புழு, பூச்சிபிடித்து விடுகிறது. இறுதியில் அதுவும் மண்ணுடன் மக்கிப் போய்விடுகிறது. செத்துப்போனது என்ற பிறகு அதைப் பற்றி ஒன்றுமே கிடையாது. அதன் முடிவு அத்துடன் சரியாகி விடுகிறது. இதை நாம் கேள்விப்படவில்லை; சாஸ்திரத்தில் படிக்கவில்லை. கடவுளும் வெங்காயமும் கூறியதாக நான் உங்களிடம் கூறவில்லை. நேரில் கண்டவை; நீங்களும் நேரில் காணுகிற விஷயமே அன்றி, நான் அவன் சொன்னான் இவன் சொன்னான் என்று சொல்லவில்லை; எனவே இந்த முடிவுக்குப் பிறகு என்ன இருக்க முடியும்? ஒன்றுமே கிடையாது. அத்துடன் வாழ்க்கை இறுதியடைந்து போய்விடுகிறது.

பார்ப்பனன் தங்கள் வாழ்க்கைக்குச் சாதகமாகப் பலவழிகளைக் கையாளுகின்றான். மனிதன் இறந்தவுடன் அந்த உடலை அவரவர் மதப்படி, அதிலும் மதத்தின் உட்பிரிவாக அமைக்கப்பட்டுள்ள ஜாதிமுறைப்படி எரிக்கவோ, புதைக்கவோ வேண்டும் என்று எழுதி வைத்திருக்கிறான். அதன்படி மக்களும் இது எங்கள் ஜாதி வழக்கம் என்று கூறிக் கொண்டு, புதைப்பவர்கள் புதைப்பதும், எரிப்பவர்கள் எரிப்பதுமாக இருக்கின்றனர்.

இதனால் என்னவென்றால் அந்தந்த ஜாதிக்காரன் அவனுடைய பின்சந்ததிகள் இன்னா ஜாதியைச் சேர்ந்தவர்கள் அவர்களும், அதே முறையைப் பின்பற்ற வேண்டும் என்ற முறையை நிலைநாட்டுவதன் மூலம் நடத்தப்படுகின்றன. எனவே மனிதன் இறந்த பின்னும்கூட பார்ப்பான் மதப்பிரச்சாரத்திற்கென்று இன்னின்ன பழக்க வழக்கம் என்று ஏற்படுத்தி இருக்கிறான். அத்துடன் விடவில்லை. செத்துப் போனவுடன் உடலிலிருந்து ஆத்மா என்று ஒன்று பிரிந்து விடுகிறதாம்.

அது இங்கே தங்காமல் நேராக மேல்லோகம் போகிறதாம்! இவ்வளவு இயற்கைத் தன்மைகளையும் கண்டபின் ஆத்மா என்பது எங்கே இருக்கிறது? அது எப்படிப் பிரிகிறது? என்றால் அது உருவம் அற்றது, கண்ணுக்குத் தெரியாதது என்று கூறினார்கள். அந்த ஆத்மா நேராக மேல்உலகம் சென்று அங்கு அது இங்கு செய்த பாவபுண்ணியத்துக்கு ஏற்றபடி தண்டனை பெறுகிறதாம். பாவம் செய்த ஆத்மா நரகத்தில் தள்ளப்படுகிறதாம். புண்ணியம் செய்த ஆத்மா மோட்சத்தில் தள்ளப்படுகிறதாம்.

இங்கேதான் உடல் நம் கண்முன்பாகவே எரிக்கப்பட்டது அல்லது புதைக்கப்பட்டது. உருவம் அற்ற ஆத்மா எப்படி அங்கே தண்டனை பெறும்? என்று கேட்டால் அந்த ஆத்மாவுக்கு வேறொரு உடலை மேல் உலகத்தில் கொடுக்கிறார்களாமே! அந்த உடலை இந்த ஆத்மா உடுத்திக் கொண்டவுடன் மனித உருவம் அடைகிறதாம். அதே உடலுக்கு அங்கே தண்டனை கிடைக்கிறதாம். இதில் என்ன நியாயம் இருக்கிறது என்பதைச் சிந்திக்க வேண்டும்.

பாவமோ புண்ணியமோ செய்த உடல் நம் கண்முன் இங்கே இருக்க, அங்கே வேறொரு உடல் பாவத்தின் தண்டனையையோ, புண்ணியத்தின் சுகத்தையோ அனுபவிக்கிறதாம். அப்படியானால் உண்மையில் பாவம் செய்த உடலைத் தண்டிக்க வேண்டும்; உண்மையில் புண்ணியம் செய்த உடல் சுகமடைய வேண்டும். இதைவிட்டு விட்டு, ஏதும் அறியாத வேறொரு உடலை வதைப்பதும், சுகப்படுத்துவதும் என்ன நியாயம் என்று கேட்டால் உடனே இவன் நாத்திகம் பேசுகிறான் என்று தான் சொல்லத் தெரியுமே தவிர தக்க பதில் ஒன்றும் கூற முடியாது.

மறுபடியும் அந்த ஆத்மா உலகில் உருவம் எடுத்து வருகிறதாம்! அந்த உருவம் பாவ புண்ணியத்திற்கு ஏற்றபடித் தக்க உருவம் அடைகிறதாம். அதில் ஃபஸ்ட்கிளாஸ் (முதல்தரம்) உருவம் என்று சொல்லப்படுவது பார்ப்பன உருவம். மற்றவை எல்லாம் அதற்குக் கீழ்ப்பட்டவை. மனித உருவத்திலேயே பார்ப்பான் தவிர்த்த மற்ற கீழ்ஜாதி உருவங்கள் தரம் பிரித்து உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்பதற்குத் தகுந்தபடி அமைக்கப்பட்டிருக்கின்றன. மனித உருவத்துக்குக் கீழ் மிருக உருவம்! அதிலும் தரம் பிரித்து அமைத்து மற்றபடி மரம், செடி, கொடி இப்படி அமைக்கப்பட்டிருக்கின்றன.

இதை ஏன் கூறுகிறேன் என்றால் அயோக்கியப் பார்ப்பனர்கள் தங்களை மட்டும் பெரும் புண்ணியாத்மாக்கள், மற்றவர்கள் எல்லாரும் பெரும் சண்டாளர்கள் என்பதை வாய்விட்டுக் கூறுவதற்குப் பதிலாக இப்படி எழுதி வைத்திருக்கிறார்கள் என்பதைக் கூறவேயாகும். இப்படி நம்மை எந்த விதத்தில் இழிவுபடுத்த வேண்டுமோ அம்முறைகளில் எல்லாம் இழிவுபடுத்தி இருக்கிறார்கள்.

அந்த ஆத்மாதான் மேல்லோகத்தில் புண்ணியத்திற்கேற்றபடி மோட்சத்திலேயோ அல்லது பாவத்திற்கேற்றபடி நரகத்திலேயோ தள்ளப்பட்டிருக்கிறதே, பிறகு இங்கே எப்படி வந்தது? அதனதன் நல்வினை தீவினைக்குத் தகுந்தபடி மோட்சம் நரகத்தில் போய்ச் சேருகிறது என்ற பிறகு இங்கே எப்படிக் குதித்து வரமுடியும்? அப்படியானால் மோட்சத்திலிருந்து தப்பி ஓடிவந்ததா? நரகத்தை விட்டு ஓடிவந்து விட்டதா? அப்படி அங்கு போய்ச் சேருகிற ஆத்மா சாந்தியடைய இங்கே பார்ப்பானுக்குத் தானதர்மம் செய்தால் போதுமாம்! உடனே அது அவர்களுக்குப் போய்ச் சேருகிறதாம்! அதை அடைந்த அவர்கள் சுகம் அடைகிறார்களாம்! என்ன முட்டாள்தனம் என்பதைச் சிந்திப்பதே இல்லை. 100க்கு 100 முட்டாள்களாக இருப்பவர்கள்தான் இன்னமும் இதை நம்பிக் கொண்டு பார்ப்பானுக்கு அள்ளிக் கொடுக்கின்றனர். கையில் பணம் காசு இல்லை என்றால்கூட கடன் வாங்கியாவது திவசமும் கருமாதியும் செய்கிறான்.

இப்படித் திவசம் செய்வது குறிப்பிட்ட நாள் வரையிலும் என்று கூட இல்லை. இவன் உயிர் இருக்கும் நாள்வரை அவன் தகப்பனுக்குத் திவசம் செய்கிறான். பார்ப்பான் கூறி இருக்கிறபடி மேலே சென்ற ஆத்மா பிறகு என்ன உருவம் எடுத்ததோ தெரியவில்லை. அந்த உருவம் எடுத்த பிறகும் இவன் திவசம் செய்தானாகில், பார்ப்பான் கூறுகிறபடி அந்த ஆத்மா எங்கே இருந்தாலும் அந்த தானப் பொருள்கள் போய்ச்சேர வேண்டும். அப்படி இது வரை யார் அடைந்திருக்கிறார்கள்?

அப்படியே அவன் கூறுவது உண்மை என்றாலும் இக்கூட்டத்தில் உள்ள அத்தனை பேரும், ஏன் இவ்வூரில் உள்ள அத்தனை பேரும் மற்றும் இந்நாட்டு மக்கள் அத்தனை பேரும் இதற்கு முன் ஏதாவது ஒரு பிறவியில் இருந்திருக்க வேண்டும். நாம் இல்லை என்றாலும் மற்ற சீவராசிகளாவது முதலில் மனித உருவத்தில் இருந்திருக்க வேண்டும். அவைகள் இறந்தவுடன் அதனதன் பிள்ளைகள் திவசம் கொடுப்பார்கள். அத்தனை பேருக்கும் இல்லை என்றாலும் ஒரு சிலருக்காவது தன்னுடைய பிள்ளைகள் திவசம் கொடுப்பார்கள்; அப்படிக் கொடுப்பது இப்போது இவர்களுக்கு வந்து சேரவேண்டும். நியாயப்படி அதுதான் முறையாகும்.

ஆனால் இதுவரை அப்படி யாரும் அடைந்ததாகக் கிடையாது. கேள்விப்பட்டது கூட இல்லை. எனவே பார்ப்பானுக்குக் கொடுத்த பின் அதை ஜீரணித்து விடுகிறான். பிறகு எங்கே இவன் அப்பனுக்கு மேல் உலகத்துக்கு? போக முடியும்? அப்படியே பார்ப்பான் மேல் உலகத்துக்கு அனுப்பும் சக்தி கொண்ட மந்திரம் கொண்டவனாக இருந்தால் இன்றைக்கு எவ்வளவோ காரியத்துக்குப் பயன்படும். ஆனால் அத்தனையும் புரட்டு என்பதற்கு நடந்த சம்பவம் ஒன்றைக் குறிப்பிடுகிறேன்.

ஒரு பார்ப்பனனிடம் ஒரு மடையன் திவசம் கொடுத்துக் கொண்டிருந்தானாம். அப்போது பார்ப்பனன் சொல்படி அந்த மடையன் ஆற்றில் உள்ள தண்ணீரைக் கையால் அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தான். அதன் காரணம் என்னவென்றால் இவன் இறைக்கும் தண்ணீர் மேல் உலகத்திற்குப் போய் இவனுடைய முன்னோர்களுக்குப் பயன்படுகிறது என்பதாகும். அந்த அடிப்படையில் புரோகிதன் மந்திரம் கூற இவன் தண்ணீர் இறைக்கிறான்.

கிழங்குத் தோட்டம் வைத்திருக்கிறேன். அதற்குத் தண்ணீர் இறைத்து அதிக நாள்கள் ஆகின்றன. இப்போது நீங்கள் மந்திரம் சொல்லும்போது இறைத்தால் இந்தத் தண்ணீர் என்னுடைய உருளைக்கிழங்குத் தோட்டத்துக்கு போய்ச்சேரும்,” என்றானாம்.

அதற்குப் புரோகிதன் “அது எப்படி அவ்வளவு தூரம் போய்ச் சேரும்?” என்று கேட்க அதற்கு இவன் “நீங்கள் இன்றைக்கும் தண்ணீர் எங்கேயோ கண்ணுக்குத் தெரியாமல் ஒருவரும் காணமுடியாத அவ்வளவு உயரத்தில் இருக்கும் மேல் உலகத்திற்குப் போகிறபொழுது இது இங்கே அடுத்த ஊரில் உள்ள என் தோட்டத்திற்குப் போகாமல் இருக்க முடியுமா?” என்று கேட்டானாம். பிறகு புரோகிதன் நம்முடைய சாயம் வெளுத்தது என்று நினைத்து தலைகுனிந்து போய்விட்டானாம்.

clip_image001அம்பேத்கர், உலகத்தில் பெரிய அறிஞர்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர். அவர்கள் இவ்வளவு பெரிய அறிஞராக விளங்கக் காரணம் என்ன? படிப்பு, திறமை என்று சொல்வதெல்லாம் இரண்டாவதுதான். அவரைவிடப் படித்தவர்கள், திறமை உள்ளவர்கள் இருக்கிறார்கள். ஆகையால் அம்பேத்கர் பெரிய அறிவாளியாக விளங்கக் காரணம் அவரது படிப்பு, திறமை என்பவை மாத்திரமல்ல; அவருடைய படிப்பும் திறமையும் நமக்குப் பயன்படுகிற தன்மையில் இருப்பதால்தான் அவரை அறிவாளி என்று சொல்ல வேண்டியிருக்கிறது. மற்றவர்கள் படிப்புத் திறமையெல்லாம் வேறு விதத்தில் பயன்படுத்தப்படுகிறது.

அம்பேத்கர் ஒரு நாஸ்திகர். அவர் இன்றல்ல; நீண்ட நாளாகவே நாஸ்திகர். ஒன்று சொல்லுகிறேன். உலகத்தில் யார் யார் பெரிய அறிவாளிகளாக இருக்கிறார்களோ, அவர்களெல்லாரும் நாஸ்திகர்கள்தான். நாஸ்திகராக இருக்கிறவர்கள்தான் ஆராய்ச்சியின் சிகரமாக, அறிவு பிரகாசிக்கக் கூடிய மனிதராக ஆக முடிகிறது. அவர் தனது சொந்த அறிவை உபயோகித்து, தான் கண்டதைத் தைரியமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

நம் நாட்டில் அறிஞர் கூட்டம் என்பவரெல்லாரும் எடுத்துச் சொல்லப் பயப்படுவார்கள். அவர் இதுபோலல்லாமல் தைரியமாக எடுத்துச் சொல்லி வந்திருக்கிறார். இப்பொழுது அதிசயமாக உலகம் பூராவும் நினைக்கும்படியான சம்பவம் ஒன்று நடந்தது. அதுதான் அம்பேத்கர் புத்த மதத்தில் சேர்ந்தது. இப்போது பேருக்குத்தான் அவர் புத்த மதத்தில் சேர்ந்ததாகச் சொல்கிறாரே தவிர, அம்பேத்கர் வெகுநாட்களாகவே புத்தர்தான்.

1930 - 35லேயே சாதி ஒழிப்பில் தீவிர கருத்துள்ளவராக இருந்தார்; சாதி ஒழிப்புக்காக பஞ்சாபில் ("ஜாத் பட் தோடக் மண்டல்' என்று கருதுகிறேன்) ஒரு சபை ஏற்படுத்தியிருந்தார்கள். என்னைக்கூட, அதில் ஓர் அங்கத்தினராகச் சேர்த்திருந்தார்கள். அந்தச் சபையினர் சாதி ஒழிப்பு மாநாடு என்பதாக ஒரு மாநாடு கூட்ட ஏற்பாடு செய்து, அந்த மாநாட்டுக்கு அம்பேத்கர் அவர்களைத் தலைமை வகிக்கக் கேட்டுக் கொண்டார்கள். அவரும் ஒத்துக் கொண்டு தலைமை உரையாக 100 பக்கம் ஆங்கிலத்தில் எழுதினார்.

அதில் பல ஆதாரங்களை எடுத்துப்போட்டு, சாதி ஒழிய இந்து மதமே ஒழிய வேண்டும் என்று எழுதியிருந்தார். இதைத் தெரிந்து அவரிடம் "உங்கள் மாநாட்டுத் தலைமை உரையை முன்னாடியே அனுப்புங்கள்' என்று கேட்டு வாங்கிப் பார்த்தார்கள். அதில் ஆதாரத்தோடு இந்து மதம் ஒழிய வேண்டும் என்று எழுதியிருந்தார். அதைப் பார்த்துவிட்டு, “உங்கள் தலைமையுரை எங்கள் சங்க மாநாட்டில் படிப்பதற்கு ஏற்றதாக இல்லை. இது சாதி ஒழிப்புச் சங்கமே தவிர, இந்து மத ஒழிப்புச் சங்கமல்ல; ஆகையால் நீங்கள் இந்து மதம் ஒழிய வேண்டும் என்கிற அந்த ஒரு அத்தியாயத்தை நீக்கிவிட வேண்டும்'' என்று அம்பேத்கரிடம் கேட்டார்கள்.

அதற்கு அம்பேத்கர் " சாதி ஒழிப்பிற்கு இந்து மதம் ஒழிய வேண்டும்' என்கிறதுதான் அஸ்திவாரம். அதைப் பேசாமல் வேறு எதைப் பேசுவது? ஆகையால் அதை நீக்க முடியாது என்று சொல்லிவிட்டார். பின் மாளவியா ஏதேதோ சமாதானமெல்லாம் சொன்னார். அதற்கும் அவர், “நான் தலைமை உரையைப் பேசுகிறபடி பேசுகிறேன்; நீங்கள் வேண்டுமானால் அதைக் கண்டித்து மாநாட்டில் பேசுங்கள்; தீர்மானம் வேண்டுமானாலும் போடுங்கள், நான் முடிவுரையில் அதுபற்றிப் பேசுகிறேன்'' என்று சொல்லிவிட்டார். பிறகு மாநாடே நடக்காமல் போய்விட்டது.

நான் அம்பேத்கரிடம் அந்தப் பேச்சை வாங்கி, "சாதியை ஒழிக்கும் வழி' என்று தமிழில் புத்தகமாகப் போட்டு வெளியிட்டேன். அவர் அப்போதே அவ்வளவு தீவிரமாக இருந்தார். நாம் ராமாயணத்தைப் பற்றி வாயால் பேசிக் கொண்டிருக்கும் போதே, அதாவது 1932இலேயே அவர் ராமாயணத்தைக் கொளுத்தினார். அந்த மாநாட்டுக்கு என். சிவராஜ் தான் தலைவர். இதெல்லாம் "குடியரசில்' இருக்கிறது. நான் 1930இல் ஈரோட்டில் நடந்த சீர்திருத்த மாநாட்டிற்கு அம்பேத்கரை அழைத்தேன். என்ன காரணத்தாலோ அம்பேத்கர் வரவில்லை. அவருக்குப் பதிலாக எம்.ஆர். ஜெயகர் வந்திருந்தார். அம்பேத்கர் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அந்தச் சமயத்தில்தான் அம்பேத்கர் இஸ்லாம்ஆகப் போகிறேன் என்று சொன்னார். நானும் எஸ். ராமனாதனும் இங்கிருந்து தந்தியடித்தோம். “தயவு செய்து அவசரப்பட்டு சேர்ந்து விடாதீர்கள். குறைந்தது ஒரு லட்சம் பேராவது கூட பின்னால் வந்தார்கள் என்றால்தான் அங்கும் மதிப்பிருக்கும்; இல்லாவிட்டால் மவுலானார் சொல்கிறபடித்தான் கேட்க வேண்டும். அவர்களோ கை வைக்கக் கூடாத மதம் (perfect religion) என்பதாகச் சொல்லிக் கொண்டிருப்பவர்கள். எவனுக்குமே கை வைக்க உரிமையில்லை என்பவர்கள்.

வெறும் தொழுகை அது இது எல்லாம் உங்களுக்கு ஜெயில் போலத்தான் இருக்கும். தனியே போவதால் அங்கும் மரியாதை இருக்காது'' என்று தந்தியில் சொன்னோம். அதன் பிறகு யார் யாரோ அவர் வீட்டிற்குப் போய் மதம் மாறக் கூடாதென்று கேட்டுக் கொண்டார்கள். பத்திரிகையில் வந்தது. அப்போதே அவர் மதம் மாறுவதில் தீவிர எண்ணம் வைத்திருந்தார். எப்படியோ கடைசியாக, இப்போது புத்த மதத்தில் சேர்ந்துவிட்டார். என்றாலும் அவர் ஏற்கனவே புத்தர்தான்.

(28.10.1956 அன்று, வேலூர் நகராட்சி மன்றத்தில் ஆற்றிய சொற்பொழிவு)

image

இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளுக்குள் தோன்றியதுதான் இந்தக் கடவுள் சங்கதி. அதுவும் இந்தக் கடவுளை நமது ஆள் உண்டாக்கவில்லை. வெள்ளைக்காரன்தான் இந்தக் கடவுளையே உண்டாக்கியவன். அதைப் பார்ப்பான் ஒன்றுக்குப் பத்தாகப் பெருக்கி விட்டான். ஒரு கடவுள் பெயர் கூடத் தமிழ்ப் பெயரே கிடையாது. இங்கு இருக்கிற கடவுள்களின் பெயர்கள் எல்லாம் வடமொழிச் சொற்கள்தான். கடவுள் என்ற சொல்லே தமிழில் கிடையாது. தமிழனுக்குக் கடவுளே இல்லை. இன்றைக்கும் தமிழ்ச் சொல்லில் உள்ள ஒரு கடவுளும் கிடையாது.

வெள்ளைக்காரனும் காட்டுமிராண்டியாக இருந்த காலத்தில்தான் கடவுளைக் கற்பித்தான். அந்தக் கடவுளுக்கு நிறம் மஞ்சள் வர்ணம் என்றும் சொன்னான். அந்தக் கடவுளைக் காட்டு மனிதன் சிங்காரித்தான். அதற்கு உடை என்னடா என்றால் புலித்தோல் என்றான். தலை எல்லாம் சடை. காது எல்லாம் பெரிய ஓட்டை. நகைகள் எல்லாம் பாம்புகள். குடி இருக்கிற இடமோ சுடுகாடு. கையில் இருக்கிற கருவிகளோ மண்டை ஓடுகள். இவை எல்லாம் மனிதனுக்கு இருக்கக் கூடிய யோக்கியதையா? இவை எல்லாம் காட்டுமிராண்டித்தனமான சின்னங்கள் அல்லவா?

வெள்ளைக்காரனைப் பார்த்துதான் பார்ப்பான் இங்குக் கடவுளை உண்டு பண்ணினான். வெள்ளைக்காரன் கடவுள் ஜுபிடர்; பார்ப்பான் அதற்கு கொடுத்த பெயர் இந்திரன். வெள்ளைக்காரன் - மைனாஸ்; பார்ப்பான் வைத்த பெயர் எமன். வெள்ளைக்காரன் - நெப்டியூன்; பார்ப்பான் - வருணன். வெள்ளைக்காரன் - லூனஸ்; பார்ப்பான் - சந்திரன். வெள்ளைக்காரன் - சைனேஸ்; பார்ப்பான் - வாயு. வெள்ளைக்காரன் - அப்பல்லோ; பார்ப்பான் - கிருஷ்ணன். வெள்ளைக்காரன் - மெர்குரி; பார்ப்பான் - நாரதன். வெள்ளைக் காரன் - மார்ஸ்; பார்ப்பான் - கந்தன். இப்படியாக வெள்ளைக்காரனைப் பார்த்து காப்பி அடித்தவன்தான் இந்தப் பார்ப்பான். அப்படிக் காப்பி அடித்த கடவுள்களுக்கும் கதைகள் எழுதி, புராணங்கள் எழுதி, பார்ப்பான் வயிறு வளர்க்க ஆரம்பித்து விட்டான். அதை அப்படியே தமிழன் நம்பி ஏற்றுக் கொண்டு விட்டான்.

அப்படி ஏற்றுக் கொண்ட கடவுள்களில் ஒன்றுதான் இந்த விநாயகன். விநாயகன் என்ற சொல்லே தமிழ் கிடையாது. கடவுளுக்கு நாட்டில் என்ன பொதுவாக இலக்கணம் சொல்கிறார்கள். கண்ணுக்குத் தெரியாது - கைக்குச் சிக்காது புத்திக்கும் எட்டாது என்கிறான். அப்படியானால் எப்படிக் கடவுளை நம்புவது என்று கேட்டால், நம்பு என்கிறான். நம்பு என்பதில்தான் கடவுளை வைத்து இருக்கிறான். கிறித்துவனும், துலுக்கனும் அதைத்தான் சொல்கிறான். கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்கு எப்படி உருவத்தை உண்டாக்கினான்? கருணையே வடிவானவர் என்கிறான்.

அவன் கையில் ஏன் சூலாயுதம்? வேலாயுதம்? அரிவாள், மண்வெட்டி, கோடாரிகள் எல்லாம்? இவை எல்லாம் கருணையின் சின்னங்களா? கொலைகாரப் பசங்களுக்கு இருக்க வேண்டிய கருவிகள் எல்லாம் கடவுளுக்கு எதற்கு? கடவுளுக்கு ஒழுக்கத்தையாவது நல்ல முறையில் கற்பித்து இருக்கிறானா? எந்தக் கடவுள் இன்னொருத்தனுடைய மனைவியை கெடுக்காமல் இருந்திருக்கிறான்? விபச்சாரம் செய்யாத கடவுள் ஒன்றாவது உண்டா? இருந்தால் சொல்லட்டுமே, ஏற்றுக் கொள்கிறேன். கடவுள் பிறப்பைப் பற்றி தான் எழுதி வைத்து இருக்கிறானே கொஞ்சமாவது யோக்கியம் வேண்டாமா? விநாயகன் பிறப்பு எவ்வளவு ஆபாசமானது!

இன்றைக்கு நாம் சூத்திரர்களாக இருக்கிறோம் என்றால், அது பார்ப்பானால் மட்டுமல்ல - நாமே அதை ஒத்துக் கொண்டு இருக்கிறோம். பார்ப்பான் நம்மைச் சூத்திரன் என்று சொல்லப் பயந்து விட்டான். ஆனால், நாமே நாம் இந்து என்று ஒப்புக் கொண்டு, கோயில்களுக்குச் செல்வதன் மூலமாகவும், நெற்றியில் சாம்பலைப் பூசிக் கொள்வதன் மூலமாகவும் சூத்திரன் என்பதை ஏற்றுக் கொண்டு இருக்கிறோம்.

இன்றைக்கு இருக்கிற அரசாங்கம் நமது அரசாங்கம் என்று பேர். என்னத்துக்காக இந்தப் பண்டிகைகளுக்கு எல்லாம் லீவு விட வேண்டும்? நம்மை இழி மகன் என்று முத்திரைக் குத்திக் கொள்ளவா? துணிச்சலாக இந்த லீவுகளை எல்லாம் கேன்சல் செய்ய வேண்டும். இந்த அரசாங்கங்கூட, இந்த இடிந்து போன கோயில்களை எல்லாம் பழுது பார்த்துப் புதுப்பித்துக் கொண்டு இருக்கிறது. என்ன அர்த்தம்? நம்மை என்றென்றும் இழிமக்களாக்கச் செய்யும் முயற்சிதானே இது? வெட்கப்பட வேண்டாமா?

எங்களுடைய இயக்கம் இந்த நாட்டில் தோன்றிப் பாடுபடவில்லை என்றால், இந்தக் கடவுளைச் செருப்பாலடித்து, சாத்திரங்களைக் கொளுத்தி எரிக்கவில்லை என்றால், நமக்குப் படிப்பு ஏது? உத்தியோகம் ஏது? இன்றைக்கு நூற்றுக்கு நூறு தமிழனாக இந்த நாட்டை ஆட்சி செய்கிறார்களே! இது எப்படி வந்தது? நம்முடைய முயற்சியால் அல்லவா?

(29.8.73 அன்று சிதம்பரத்தில் விநாயக சதுர்த்தி கண்டனப் பொதுக் கூட்டத்தில் ஆற்றி உரை)

 

image

முரண்..

இறைவனின் வாகனம் என்றான் நாயை

அவதாரம் என்றான் பன்றியை

இறைவனே என்றான் குரங்கை

இவனே திட்டினான் என்னை

நாயே! பன்றியே! குரங்கே!

நாற்காலி..

இங்கே வேறுபாடு அதிகம் இல்லை

நாற்காலிக்கும் கட்டிலுக்கும்.

வீடு தூங்க கட்டில்

நாடு தூங்க நாற்காலி

ஞானம்..

ஞானம் பெற்றது

நீ-உன்மண்ணில் பள்ளிக் கூடங்கள்

கட்டப்பட்டதால் நான்-என் மண்ணில்

பள்ளிக்கூடங்கள் இடிக்கப்பட்டதால்.

பாடம்..

புரட்சியாவது வெங்காயமாவது

என்கிறாய்

தெரிந்து பேசு

காயப்படுத்தியவனின் கண்ணீரை

வாங்கும் வெஙகாயம்.

சென்னிரை வாங்கும் புரட்சி

கோயில்..

செருப்புகளை வெளியே விட்டு

உள்ளே போகிறது அழுக்கு.

தளை..

கணவனிடம் ஓப்புதல் கேட்கிறாள்

பெண்கள் விடுதலை அமைப்பில்சேர.

வில்..

வீழ்ந்த தமிழன் கதையை

விம்மி விம்மி பாடிக்கொண்டிருக்கிறது

மேடையில்-

வெட்கம் கெட்ட வில்

பெண்மை..

தெரிவது உனக்கு அவள் கண்களில்

வண்டும் மீனும் பூவும்

தெரிவதில்லை கண்ணீர்

வெறி..

எரியவில்லை அடுப்பு சேரியில்.

போராடினோம்…

எரிந்ததுஅடுப்பல்ல-சேரி

வீரம்..

உன் கனவில் பாம்பு துரத்துகிறது

நீ ஓடுகிறாய்

குறவன் அவன் துரத்துகிறான்

பாம்பு ஓடுகிறது

வீரம் தொழிலாளிக்கு .

சாமி..

எங்கள் குடிசையில்

அடிக்கடி சாமி ஆடுவாள்

அம்மா ஏனோ தெரியவில்லை

அன்றும் இன்றும்

குடிசைக்கே வருகிறது சாமி

மாடிக்கே போகிறது வரம்.

நிழல்..

எதிரிகளால் அழிக்கப்பட்டன எங்கள் காடுகள்

நிமிர்ந்தோம்

இன்று-போராளிகளின் நிழலில் மரங்கள்

மாவீரன்..இது உயிருக்கு வந்த சாவு அல்ல

சாவுக்கு வந்த உயிர்;

போர்..

ஊரில் உங்கள் சுடுகாடு.

சுடுகாட்டில் எங்கள் ஊர்.

உறுத்தல்..

இரவெல்லாம் விழித்திருந்து

எங்களுர் ஆச்சி இழைத்தபனைபபாய்…

வாங்கினேன் உறங்குவது எப்படி

இவள் பாயில்?

மனிதன்..

இவன் பசுவின் பாலைக்கறந்தால்

பசு பால் தரும் என்கிறான்.

காகம் இவன் வடையை எடுத்தால்

காகம் வடையை திருடிற்று என்கிறான்

இப்படியாக மனிதன்….

மானம்..

உன் கோவணம் அவிழ்க்கப்பட்டதா?

அவன் கைகளை வெட்டு

கெஞ்சி கோவணம் கட்டாதே

அம்மணமாகவே போராடு.

அறுவடை..

திரைப்படச்சுவரொட்டியை

தின்றகழுதை கொழுத்தது

பார்த்த கழுதை புழுத்தது

மந்தை..

மேடை

தமிழா!

ஆடாய் மாடாய்

ஆனாயடா…

நீ என்றேன்

கைதட்டினான்

பெண்..

ஏடுகளில் முன்பக்கத்தின்

அட்டையில்

வீடுகளில் பின்பக்கத்தில்

அடுப்பங்கரையில்.

கோடை..

தங்க வளையலைக்கழற்றி

போராளியிடம் தந்தாள்

செலவுக்குவைத்துக்கொள்

உங்களில் பலருக்கு

கைகளே இல்லை

எனக்கு எதுக்கு வளையல்.

திமிர்..

வேலைக்காரன்மேல் பாய்ந்தார்

நாயே பீட்டரை கவனித்தாயா?

இவர் வீட்டில் பீட்டர் என்றால் நாய்

நாய் என்றால் மனிதன்

கொலை..

ஒரு நாள் வாழ்க்கை பூவுக்கு…

விரியுமுன்பே பறித்து

இனறவனுக்கு அர்ச்சனை

செய்கிறான்

நூறாண்டு வாழ்ககை வேண்டி தனக்கு

அடக்கம்..

அடக்கம் செய்யப்படுகிறோம்…

இரண்டு பெட்டிகளில்.

சவப்பொட்டியிலும்

தொலைக்காட்சிப் பெட்டியிலும்

உலகமைதி..

மாந்த நேயம் பேசின அணுகுண்டுகள்

புறாக்களை பறக்கவிட்டன கழுகுகள்.

போராடிக்கொண்டிருக்கிறது அமைதி.

அடி ..

கலையை கலைஞனை

போற்றிய நாடிது என்கிறாய்…

காலம் காலமாய்

பறையை பறயனை தாழ்த்திய நீ.

ஆணாதிக்கம்..

எப்படியும் இருக்கலாம்

ஆணிண் திமிர்

திரௌபதைக்கு கணவன் ஐந்தாகவும்

அர்ச்சுனனுக்கு மனைவி ஐந்தாகவும்

வேலி..

மயில் இறகு புலித்தோல்

மான் கொம்பு யானைத்தந்தம்

அழகாய் இருக்கிறது எங்கள் வீடு.

வனவிலங்குகள் காப்பாளர் அப்பா

காலம்..

உன் கையிலா கடிகாரம்?

கடிகாரத்தின் கையில் நீ.

கடற்கரை..

உடல் நலம் தேடி

காற்றுவாங்க வந்து போகும்

பெரியஇடத்து மாடிகள்

இங்கேயே நோயோடும் நொடியோடும்

ஒடுங் கிடக்கும் மீனவர் குடிசைகள்

நிலவு..

புராணமாய் இறைவனின் தலையில்

வரலாறாய் மனிதனின் காலில்.

இருள்..

பகலிலும் தலைவர்கள் குத்துவிளக்கு ஏற்ற

நிகழ்ந்தன விழாக்கள்.தேடுகிறோம்…

எங்கேவெளிச்சம்?

தாஜ்மஹால்..

காதலி புதைக்கப்படட இடம் காட்டுகிறாய்

காதலை புதைத்த இடம் காட்டு

எங்கே ஷாஜஹானால் கசக்கி எறியப்பட்ட

அந்தப்புரப்பெண்களின் கறுப்புகல்லறைகள்?

புலமை..

கண்ணீர் சிந்துகிறோம் கண்ணீருக்காக

இவன் உவமைகளும்…முத்துக்கள்

என்றானே கண்ணீரை!

பால்..

என்னைத் தெய்வம் ஆக்கினாய்

சிவன்பாதி சக்திபாதி என்றாய் ஏமாற்றாதே-

உன்பால் வேறுபாடு அழுத்தமானது

சிவனுக்கு பசுப்பாலும் சக்திக்குகள்ளிபாலும்

அரண்..

என் வலகையில் ஐந்துவிரல்கள்

உண்ணவும் வணங்கவும் மட்டுமல்ல

அறையவும்தான்.

தேர்தல்..

மாலை வளையல் ழூக்குத்தி

பென்னான எதுகும் இல்லை

எங்கள் குடிசையில்.

அவன் செல்கிறான்

இருக்கிறதாம் எங்களிடம்…

பொன்னான வாக்குகள்

இனவெறி..

மாடுகள் காணாமல்போகும் என்று

தோலில் குறிபோடும் எங்கள் மண்

கொஞ்சநாளாய்…

மனிதர்களையே காணவில்லையே.

குப்பைத்தொட்டி..

அலுவலகத்தில் இருக்கிறவனுக்

இது குப்பைத்தொட்டி

குப்பை பொறுக்கி வாழ்கிறவனுக்கு

இதுஅலுவலகம்.

ஏழ்மை..

சதை பிடித்து விடுகிறாள்

அழகு நிலையத்தில்

எலும்புக்கைகளால்

கண்ணோட்டம்..

செருப்பைப்பார்கையில் நீங்கள்

அணிந்திருக்கிறவனின்

காலைப்பார்க்கிறீர்கள்.

நான் செய்தவனின்

கையைப்பார்க்கிறேன்

நிமிர்வு..

தேவை பயில்வன்களல்ல வீரர்கள்

உன் உடலின் கூனல்பற்றிய கவலைவிடு

வில்லில் இல்லாத நிமிர்வா?

கூண்டு..

விடுதலை ஆவாரா சிறையில்

இருந்து என்கணவர்?

சோதிடம கேட்கிறாள்

கூண்டுக்கிளியிடம்

மண்..

என்னை என் மண்ணில்

புதைத்தாய் பகைவனே!

என் மண்ணை

எங்கே புதைப்பாய்?

குடுகுடு..

நல்லகாலம் வருகுது

நல்லகாலம் வருகுது..

தெருவிலேயே நிற்கிறான்

குடுகுடுப்பைக்காரன்.

clip_image001ரஷ்யா போன்ற நாட்டில் பார்ப்பானும் இல்லை; பறையனும் இல்லை. அந்த நாடுகளிலே என்னதான் அடக்குமுறைகள் இருந்ததாகச் சொல்லப்பட்டாலும், அறிவுக்கும் சிந்தனைக்கும் உரிமை இருந்தது. இந்த நாட்டைப் போல் அதை நினைத்தாலே கடவுள் கண்ணைக் குத்திவிடுவார்; அந்த சங்கதியை ஆராய்ந்தாயானால் நரகத்திற்குப் போய் விடுவாய்; இது கடவுளுக்கு விரோதம் என்கிற மாதிரியான நிலைமை இல்லை.

மார்க்ஸ், லெனின், ஏங்கெல்ஸ் முதலியவர்கள் இந்தப்படிதான் முயற்சி செய்ய வேண்டும் என்று சொன்னார்கள் என்பது, கம்யூனிஸ்டுகளின் வாதம். நம்டைய வாதம் என்னவென்றால், இந்த நாட்டின் நிலைமையும் தன்மையும் காரல் மார்க்சுக்கோ, லெனினுக்கோ அல்லது ஏங்கெல்சுக்கோ தெரியாது. இந்த நாட்டிலே பார்ப்பான் என்று ஒரு ஜாதி பிறவியிலேயே மேல் ஜாதியாகவும், மற்றவர்கள் எல்லாம் கீழ்ஜாதியாகவும் இருக்கிற சதாய அமைப்பு இந்த நாட்டிலே இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியாது. அதனால் மார்க்ஸ் வழியோ, லெனின் தலைறையோ இந்த நாட்டுக்கு ஒத்து வராது என்பது நம்முடைய வாதம்.

உண்மையாகவே இந்த நாட்டுக் கம்யூனிஸ்டுகள் நினைக்க வேண்டும்; அவர்களுடைய ஆதரவாளர்கள் என்பவர்களும் அறிய வேண்டும். தன் முதலில் இந்த நாட்டில் சமதருமப் பிரச்சாரம் செய்து அதற்கு ஆகவென்றே சிறைக்குப் போனவன் நான். 30 வருடமாக இந்த அடிப்படையில் தானே நாங்கள் பொதுப்பணி புரிகிறோம்! கம்யூனிஸ்டுகள் வெறும் பொருளாதாரத்தை மட்டும் முன்னிறுத்திச் சொல்லுகிறார்கள். நாங்கள், பொருளாதாரத் துறையிலே இருக்கிற பேதம் ஒழிய வேண்டியதுதான் ஆனால், சமுதாயத் துறையிலே இருக்கிற பேதம் ஒழிந்தால்தான் சமத்துவம் கிடைக்கும் என்கிறோம். பொருளாதாரத் துறை பேதமொழிப்பு வேலை எங்களுக்கு விரோதமானதல்ல. ஆனால், சமூதாயத் துறையிலே இருக்கிற பேதம் ஒழிந்தால்தான் சமத்துவம் கிடைக்கும் என்கிறோம். ஆனால், சமூதாயத்துறை பேதமொழிப்புக் காரியத்தைக் கம்யூனிஸ்டுகள் ஒத்துக் கொள்வதில்லை.

தோழர்களே! பொருளாதாரப் புரட்சிக்கு சர்க்காரை (ஆட்சியை) ஒழித்தாக வேண்டும்; மாற்றியமைத்தாக வேண்டும். ஆனால், சமூதாயப் புரட்சியை சர்க்காரை ஒழிக்காமலேயே உண்டாக்க முடியும். மக்கள் உள்ளத்திலே, இன்றைய சமூதாய சம்பந்தமாக உள்ள உணர்ச்சியையும், பயத்தையும் போக்கி, பிரத்தியட்ச (உண்மை) நிலையை மக்களுக்கு உணர்த்தினால் போதும். நிலைமை தானாகவே மாறும். இந்தச் சமூதாய அமைப்பை, இன்றைய சர்க்கார் அமைப்பு இருக்கும் போதே மாற்றிவிட முடியும் மக்கள் பகுத்தறிவு பெறும்படிச் செய்வதன் மூலமாக. 30 ஆண்டுகளுக்கு முன் இந்நாட்டில் ஜாதி ஆணவம், திமிர் எவ்வளவு இருந்தது! இன்று எங்கே போயிற்று அந்த ஜாதி ஆணவம் திமிரும்?

30 ஆண்டுகளுக்கு முன் இந்த நாட்டுத் திராவிடப் பெருங்குடி மக்கள் எவ்வவு காட்டுமிராண்டித்தனமாக, கேவலமாக நடத்தப்பட்டார்கள்? அந்த நிலைமை இன்று எவ்வளவோ தூரத்துக்கு மாற்றமடைந்து விட்டதே! எப்படி முடிந்தது இவ்வளவும்? சர்க்காரைக் கவிழ்க்கும் முயற்சி செய்ததாலா? அல்லது அண்டர் கிரவுண்ட் (தலைமறைவு) வேலையாலா? இல்லையே! மக்கள் உள்ளத்திலே பகுத்தறிவு உணர்ச்சி ஏற்படும்படியாகச் செய்ததன் காரணமாக, நிலைமையில் வெகுவாக மாறுதல் ஏற்பட்டிருக்கிறது.

முதலில் இந்தக் காரியத்தைச் செய்வோம். பிறகு தானாகவே பொருளாதார உரிமையை ஏற்படுத்திவிட முடியும். பணக்காரத் தன்மைக்கும் அஸ்திவாரமாய், ஆதாரமாய் பேதத்தை ஒழிப்போமானால், தானாகவே பொருளாதார உரிமை வந்துவிடும். ஆகவே, இந்தத் துறையில் பாடுபட முன் வாருங்கள் என்று அன்போடு, வணக்கத்தோடு அழைக்கிறேன்.

இன்னும் சொல்லுகிறேன். இந்த ஜில்லாவையே எடுத்துக் கொள்ளுங்களேன்: யார் இந்த ஜில்லாவில் பணக்காரர்கள்? முதலாவது பணக்காரன் கோயில் சாமிகள்; அதற்கடுத்த பணக்காரன் நிலமுடையோன் பார்ப்பான்; அதற்கடுத்தபடியாக பணக்காரன், நிலமுடையோன் சைவர்கள் என்ற சூத்திர ஜாதியிலே சற்று உயர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள். அதற்கடுத்தபடி, தூக்கியவன் தர்பார் என்பது போல இருக்கிறவனுக்குக் கொஞ்சம் சொத்து. கடைசியிலே யாருக்கு ஒன்றும் இல்லையென்றால், சூத்திரனிலே தாழ்த்த ஜாதி என்று சொல்லப்படுகிறவனுக்குக் கொஞ்சம் சொத்து. கடைசியிலே யாருக்கு ஒன்றும் இல்லையென்றால் சூத்திரனிலே தாழ்ந்த ஜாதி என்று சொல்லப்படுகிறவனுக்கும், பஞ்சமனுக்குந்தான் ஒன்றுமே இல்லை. இப்போது சொல்லுங்கள்: பணக்காரன் ஏழை என்கிற பாகுபாடு, உயர் ஜாதி தாழ்ந்த ஜாதி என்ற அமைப்போடு ஒட்டிக் கொண்டு, சார்ந்து கொண்டு இருக்கிறதா, இல்லையா?

இந்த அடிப்படைகளை நாம் புரிந்து கொள்ளாமலேயே இருக்கிறோம். யாரும் எடுத்துச் சொல்லுவதில்லை. காரணம், இந்த நாட்டின் எல்லாத் துறையும் மேல் ஜாதிக்காரர்கள் என்கிற பார்ப்பனர்களிடத்திலும் பணக்காரர்களிடத்திலும் சிக்கிக் கொண்டதால், அவர்கள் இந்த அமைப்பு இருக்கிறவரையில் லாபம் என்று கருதி, இந்த அமைப்பின் நிலத்தில் கையே வைப்பதில்லை. மக்களை வேறு பக்கம் திருப்பிவிட்டு விடுகிறார்கள். அதனால்தான் 2000 வருடங்களாக இப்படியே இருக்கிறோம். இன்னம் சொல்லுகிறேன், இந்தத் தொழிலாளி ஜாதி, முதலாளி ஜாதி அமைப்பு முறை அதாவது பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிறவரையில், இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்.

27.4.1953 அன்று, மன்னார் குடி வல்லூரில் ஆற்றிய உரை. "விடுதலை' 5.5.1953

விண்டோஸ் எக்ஸ்பி இயங்கு தளத்தில் பயனர் கணக்கை (user account) உருவாக்கி அதனை எவரும் அணுகா வண்ணம் பாஸ்வர்ட் மூலம் பாதுகாப்பளிக்கவும் முடியும் என்பது நீங்கள் அறிந்த விடயமே.

அப்படி நீங்கள் உருவாக்கும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்ட் ஒருவேளை மறந்து போனால் விண்டோஸில் டிபோல்டாக உருவாக்கப்படும் அட்மினிஸ்ட் ரேட்டர் (administrator) கணக்கு மூலம் லாக் ஓன் செய்து அதனை நீக்க முடியும். இந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குப் பாஸ்வர்ட் இட்டுக் கொள்வோரும் உண்டு. இப்போது அந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக் குரிய பாஸ்வர்டும் மற்ந்து போனால் என்ன செய்வது?

அதற்கும் ஒரு தீர்விருக்கிறது. எனினும் இந்த வழிமுறை ஓரளவு சிக்கலானது. விண்டோஸைப் புதிதாக நிறுவும் முறையை அறிந்திருப்போருக்கு இது இலகுவான விடயமே.

முதலில் கணினியை இயக்கி சிடியிலிருந்து பூட் ஆகுமாறு பயோஸ் (BIOS) செட்டப்பில் மாற்றி விடுங்கள். கணினியை மறுபடி இயக்கி விண்டோஸ் எக்ஸ்பீ சிடியை ட்ரைவிலிட Press any key to boot from CD எனும் செய்தி திரையில் தோன்றும். அப்போது ஒரு விசையை அழுத்த சிடியிலிருந்து கணினி பூட் ஆக ஆரம்பிக்கும். இது விண்டோஸை நிறுவும் செயற்பாட்டில் முதற்படியாகும்.

இந்த செயற்பாட்டில் கணினியைப் பரிசோதித்து பைல்கள் லோட் செய்யப்பட்டதும் Licensing Agreement திரை தோன்றும். அப்போது F8 விசையை அழுத்தியதும் வரும் திரையில் புதிதாக விண்டோஸை நிறுவுவதா அல்லது ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளதை சரி செய்வதா (Repair) என வினவும். அப்போது கீபோர்டில் R கீயை அழுத்தி ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள விண்டோஸை சரி செய்வதற்கான விருப்பை தெரிவு செய்யவும்.

அடுத்து கணினி மறுபடி இயங்க ஆரம்பித்து (restart) ஒரு சில நிமிடங்களில் திரையின் இடது புறத்தில் Installing Devices எனும் செயற்பாடு நடைபெறக் காணலாம். இந்த இடத்தில்தான் நீங்கள் செயற்பட வேண்டியுள்ளது. இங்கு கீபோர்டில் SHIFT + F10 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துங்கள். அப்போது திரையில் கமாண்ட் விண்டோ தோன்றும். கமாண்ட் ப்ரொம்டில் NUSRMGR.CPL என டைப் செய்து எண்டர் கீயை அழுத்த கண்ட்ரோல் பேனலிலுள்ள User Accounts விண்டோ திறக்கக் காணலாம். இங்கு நீங்கள் விரும்பும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்டை மாற்றவோ நீக்கவோ முடியும்.,

ஒரு யூசர் கணக்கில் நுளையும்போது அதாவது லொக்-ஓன் செய்யும் போது பாஸ்வர்டை வினவாமல் செய்ய அதே கமாண்ட் ப்ரொம்டில் control userpasswords2 என டைப் செய்து எண்டர் கீயை அழுத்துங்கள். அப்போது படத்தில் உள்ளது போல் ஒரு டயலொக் பொக்ஸ் தோன்றும். அங்கு அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குரிய பாஸ்வர்டை மாற்றவோ அல்லது நீக்கவோ (Reset password) ரீசெட் பாஸ்வர்ட் பட்டனில் க்ளிக் செய்து மாற்றிக் கொள்ளலாம்.

மாற்றங்கல் செய்த பின்னர் அந்த டயலொக் பொக்ஸை மூடிவிட்டு விண்டோஸ் ரிபெயாரிங் செயற்பாடு பூர்த்தியாகும் வரை அதனைத் தொடர வேண்டும்.

;;